என் மலர்

  நீங்கள் தேடியது "graduate women"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்மிடிப்பூண்டியில் 2 பட்டதாரி பெண்கள் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்தினர். #JactoGeo #Strike
  கும்மிடிப்பூண்டி:

  கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை நேதாஜி நகரில் ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 105 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

  தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இங்கு பணியில் இருந்த 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

  கல்வித்துறை சார்பில் பாதிரிவேடு மேற்கு அரசு பள்ளியில் இருந்து முருகன் என்ற ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

  இதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அந்த வகுப்பறையில் பாடம் கற்பித்தார். மற்ற மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

  இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம கல்விக்குழு நிர்வாகிகள், மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளும் கல்வி கற்பதற்கான வழிமுறைகளை உடனடியாக செய்தனர்.

  அதே பகுதியைச்சேர்ந்த வாசுகி, கீதப்பிரியா என்ற 2 பட்டதாரி பெண்களை கொண்டு அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

  இதனைக்கண்ட மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த அதே பகுதியைச்சேர்ந்த ஏற்கனவே தங்களிடம் பழக்கமான தற்காலிக 2 பெண் ஆசிரியர்களிடம் பாசமுடன் கல்வி பயின்றனர். #JactoGeo #Strike

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மார்த்தாண்டம் அருகே பட்டதாரி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
  நாகர்கோவில்:

  குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் (வயது 30). எம்.டெக். பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

  இவர் மீது திருவட்டார் ஆற்றூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

  நான் எம்.இ. படித்து விட்டு சென்னையில் பணியாற்றி வருகிறேன். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் சுஜித்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். நானும் அவரை நம்பி என்னையே கொடுத்தேன். ஒருமுறை வீட்டில் நான் தனியாக இருந்தபோது சுஜித் என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

  சென்னை, வேளாங்கண்ணி, பெங்களூர் என பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று அவர் கற்பழித்தார். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.

  அப்படியே உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ரூ.15 லட்சம் ரொக்கம், 150 பவுன் நகை, ஒரு கார், பாங்கியில் ரூ.25 லட்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என வரதட்சணை கேட்கிறார். மேலும் இந்த பிரச்சினையை பெரிதாக்கினால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார்.

  எனவே என்னை கற்பழித்து ஏமாற்றிய சுஜித் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

  இதையடுத்து சுஜித் மீது கற்பழிப்பு, பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  சுஜித் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். சுஜித் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
  ×