search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teaching"

    • களக்காடு கடம்போடுவாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது.
    • இந்த பயிற்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    களக்காடு கடம்போடுவாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 16 வாரங்கள், களக்காடு, இடையன்குளம், திருக்குறுங்குடி, ஏர்வாடி, நாங்குநேரி கரந்தாநேரி, பத்மநேரி, டோனாவூர், தளபதி சமுத்திரம், திருவேங்கடநாதபுரம் பள்ளிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை கல்லூரியின் தலைவர் தமிழ்செல்வன் மாணவர்களுக்கு வழங்கினார்.

    இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரேசன், பேராசிரியர்கள் பலவேச கிருஷ்ணன், கபிரியல்ராஜ், ரமேஷ், மாரியப்பன், ராதிகா, பத்ரகாளி, ஜமிலா பானு, ரெக்சி, அனிதா, கல்லூரி பணியாளர்கள் கலைசெல்வி, சுகன்யா, ரேக்கா, கெளரி உள்பட பலர் கலந்து கொண்டனர்,

    கும்மிடிப்பூண்டியில் 2 பட்டதாரி பெண்கள் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்தினர். #JactoGeo #Strike
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை நேதாஜி நகரில் ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 105 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இங்கு பணியில் இருந்த 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

    கல்வித்துறை சார்பில் பாதிரிவேடு மேற்கு அரசு பள்ளியில் இருந்து முருகன் என்ற ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    இதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அந்த வகுப்பறையில் பாடம் கற்பித்தார். மற்ற மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம கல்விக்குழு நிர்வாகிகள், மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளும் கல்வி கற்பதற்கான வழிமுறைகளை உடனடியாக செய்தனர்.

    அதே பகுதியைச்சேர்ந்த வாசுகி, கீதப்பிரியா என்ற 2 பட்டதாரி பெண்களை கொண்டு அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

    இதனைக்கண்ட மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த அதே பகுதியைச்சேர்ந்த ஏற்கனவே தங்களிடம் பழக்கமான தற்காலிக 2 பெண் ஆசிரியர்களிடம் பாசமுடன் கல்வி பயின்றனர். #JactoGeo #Strike

    ×