என் மலர்
நீங்கள் தேடியது "woman harassment"
- என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன்.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன்.
பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடினார். அப்போது சாலையில் நடந்து சென்ற மக்கள், வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டும் யாரும் அந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்து உள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அது பற்றிய விவரம் வருமாறு,
பெங்களூருவில் போக்குவரத்து நிறைந்த ஐ.டி. பூங்கா பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஈகோவேர்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் திடீரென எனது முதுகில் தட்டினார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யாரோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் சென்றதால் தன்மீது அவரது கை மோதியிருக்கும் என்று கருதினேன். ஆனாலும் மீண்டும் அதேபோல் என் முதுகில் தட்டினார். இதையடுத்து யாரோ ஒருவர் வேண்டும் என்றே இதுபோல் செய்கிறார் என்று தெரியவந்தது. இதையடுத்து நான் உதவி கேட்டு கத்தினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.
என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன். இதையடுத்து நான் உதவிக்காக மீண்டும் கத்தினேன். அப்போது நிறைய பேர் அங்கு இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன். மேலும் அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர்களை நிறுத்தி உதவி கேட்டேன். ஆனால் எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்பு நான் அவசர அவசரமாக ஈகோவேர்டில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி கிடைத்தது.
பின்னர் மறுநாள் போலீசில் புகார் செய்தேன். இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் கொண்ட பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது என்பது மிகவும் ஆச்சரியமான விசயமாக கருதுகிறேன் என்றார். இந்த சம்பவம் தற்போது பெங்களூருல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை ஊமச்சிக்குளம் பால்பண்ணை காலனியைச் சேர்ந்த புஷ்பராஜ் மனைவி நாகஜோதி (வயது 21). இவர் நேற்று காலை வாடிப்பட்டிக்கு சென்றார்.
அப்போது நாகஜோதியை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றார். நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், உன் செல்போன் நம்பர் கொடு என்று வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு நாகஜோதி மறுக்கவே, வாலிபர் சம்பவ இடத்தில் வழிமறித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது தொடர்பாக நாகஜோதி வாடிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் சேவை ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நாகஜோதிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தார்.
விசாரணையில் அவர் வாடிப்பட்டி அருகில் உள்ள செம்புக்குடிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாடிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி கனகமூலம், புதுத்தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது21). நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சந்தோஷ் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 18 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்தார்.
இந்த பெண்ணுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் பெண்ணின் தாயார் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார், கர்ப்பத்திற்கான காரணம் பற்றி கேட்டார். அப்போது கடை உரிமையாளர் தன்னை திருமண ஆசைக்காட்டி கற்பழித்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து பெண்ணின் தாயார் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மணிமேடையில் உள்ள கடையில் வேலை பார்த்த போது கடையின் உரிமையாளர் சந்தோஷ் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் என்னை அனந்தன் நகர் பகுதியில் உள்ள அவரது நண்பரின் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் அடிக்கடி என்னை அங்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். எனவே என்னை திருமணம் செய்யுமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கடையின் உரிமையாளர் சந்தோசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அதுபோல் சம்பவத்தன்று அந்த பெண் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்தார். அப்போது கலியமூர்த்தி அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டார்.
இதையடுத்து அவரது பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர்.
கோயமுத்தூர் அடுத்த கோவைபுதூர் அலமு நகரை சேர்ந்த முருகன் மகள் ராணி (23). (இருவரது பெயரும் மாற்றபட்டுள்ளது) இவர், கடந்த 19ம் தேதி இரவு கோயமுத்தூரில் இருந்து பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் சென்று கொண்டிருந்துள்ளார். பஸ் சேலம் கருமத்தம்பட்டி அருகே வந்த போது, அந்த பஸ்சின் கண்டக்டரான கூடலூர் அடுத்த கொத்தாட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவர், ஸ்ரீஜாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி வரும் வரை இதே போல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இறங்கி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்கு பதிவு செய்து, பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டரான வேல்முருகனை கைது செய்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மாணிக்க ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது28). இவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்ஷனி (23). இவர் சினிமா துறையில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
இவர்கள் இருவரும் ஒரு காரில் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தனர். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மாலையில் ரெயில்வே நிலையம் எதிரே உள்ள சூப் கடைக்கு சூப் குடிக்க வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் அக்ஷனி வடமாநில பெண் என நினைத்து அவர் அணிந்திருந்த ஆடை குறித்து கிண்டல் செய்தனர்.
இதையடுத்து அக்ஷனி ஏன் கிண்டல் செய்தீர்கள் என்று கேட்டபோது அந்த வாலிபர்கள் மீண்டும் ஆபாச வார்த்தைகளால் அக்ஷனியை வர்ணித்தனர். இதனை ஹேமந்த்குமார் தட்டிக்கேட்ட போது ஆவேசம் அடைந்த அந்த வாலிபர்கள் ஹேமந்த்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் அக்ஷனி அணிந்திருந்த ஆடையை கிழித்து மானபங்கம் செய்தனர். இதனை அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஹனிஷ்போரிஷ் (24) என்ற பெண் தைரியமாக வந்து தட்டிக்கேட்டார். அந்த பெண்ணிடமும் வாலிபர்கள் தகராறு செய்து அவரை தாக்கினர்.
இதையடுத்து அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். இதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி சதீஷ் (34)மற்றும் டிரைவர் கிருஷ்ணகுமார் (25) என்பதும் தப்பி ஓடியவர்கள் அமுது, தேவ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெண்ணை மானபங்கம் செய்தல், தாக்குதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சதீஷ், கிருஷ்ணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய அமுது, தேவ் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.






