என் மலர்
செய்திகள்

மொபட்டில் இருந்து விழுந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து சில்மிஷம்- வாலிபர் மீது போலீசில் புகார்
குலசேகரம் அருகே மொபட்டில் இருந்து விழுந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து செக்ஸ் சில்மிஷம் செய்த வாலிபர் மீது பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார்.
குலசேகரம்:
குலசேகரத்தை அடுத்த உண்ணியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று குழந்தையுடன் பொருட்கள் வாங்க குல சேகரம் சென்றார்.
குலசேகரத்தில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். உண்ணியூர்கோணம் அருகே சென்ற போது, இவரது மொபட் நிலைதடுமாறி சரிந்தது. இதில் அந்த பெண்ணும், அவரது குழந்தையும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதனை அருகில் உள்ள வீட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர் பார்த்தார். அவர் இளம்பெண் அருகே ஓடிச் சென்று அவரை தூக்கி விட்டார். பின்னர் குழந்தையையும் எடுத்து பெண்ணிடம் கொடுத் தார்.
அப்போது அந்த வாலிபர், விபத்தில் சிக்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக அந்த பெண், அவரது கணவரி டம் தெரிவித்து அழுதார். பெண்ணின் கணவர் இது பற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story






