search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "husband complaint"

  திருச்சி பாலக்கரையில் தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி:

  திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி அனிதா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.

  நேற்று முன்தினம் அனிதா, தென்னூர் காவல்காரன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அனிதா தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

  பின்னர் இது குறித்து அவர் தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  குடும்ப பிரச்சினை காரணமாக அனிதா தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது யாராது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா? என்ற சந்தேகமும் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

  அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் பட்டியலை போலீசார் திரட்டி உள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தெலுங்கானா மாநிலத்தில் ஆபரேஷன் செய்ய வந்த பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #NIMS #scissorsinabdomen
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநிலத்தின் மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி சவுத்ரி (32), குடலிறக்க நோயால் கடும் பாதிப்பு அடைந்தார்.

  இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (NIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவானது.

  கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டாக்டர்கள் அவருக்கு ஆபரேஷன் செய்தனர். உடல்நலம் தேறி வந்தவருக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, ஆபரேஷன் செய்த மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். வயிற்றில் நீளமான கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

  விசாரணையில், ஏற்கனவே நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த ஆபரேஷனில் தவறுதலாக கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்துள்ளது தெரிய வந்தது. நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  இதுதொடர்பாக, மகேஸ்வரியின் கணவர் மருத்துவமனை மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். #NIMS #scissorsinabdomen
  சுசீந்திரத்தில் குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

  நாகர்கோவில்:

  சுசீந்திரம் புதுக்கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது24).

  இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் இசக்கியம்மாள் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் செல்வதாக கூறி விட்டு தனது ஒரு வயது மகனுடன் சென்றார்.

  மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் தனது தாயார் வீட்டுக்கு செல்லவில்லை. நாகப்பன் தனது மனைவியின் தாயார் வீட்டுக்கு சென்று தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவர் இல்லை.

  இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இசக்கியம்மாள் மற்றும் அவரது குழந்தையும் தேடி வருகிறார்கள்.

  இதேபோல் புத்தளம் வீர பாகுபதி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் ராஜேஸ்வரி(வயது23). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வேலைக்குச் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வேலை முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி அவர் வேலை செய்யும் கடைக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

  மரக்காணம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

  மரக்காணம்:

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவருக்கும் அருகில் உள்ள தேவிகுளத்தை சேர்ந்த மகாலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 25.5.2018 அன்று திருமணம் நடைபெற்றது.

  மகாலட்சுமி புதுவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி தேவி குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவில் வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் பார்த்தபோது அவரை காணவில்லை.

  இதுகுறித்து மரக்காணம் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் மகாலட்சுமி எங்கு சென்றார் என விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர். 

  மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் 3 வயது மகளுடன் இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  மதுரை:

  மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 25). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (3) என்ற மகள் உள்ளார்.

  கடந்த 19-ந் தேதி பாண்டியராஜன் வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு மகளுடன் முத்து லட்சுமி வெளியே சென்றார்.

  ஆனால் இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வில்லை. மனைவி மற்றும் மகளை பாண்டியராஜன் பல இடங்களில் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

  இதனால் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் பாண்டிய ராஜா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துலட்சுமி அவரது மகள் விஷ்ணுபிரியா ஆகியோரை தேடி வருகின்றனர்.

  இதேபோல் ஜெய்ஹிந்துபுரம் பர்மா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (65. இவர் 19-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை என மகன் கணேசன் புகார் கொடுத்துள்ளார். ஜெய்ஹிந்து புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப்பதிவு செய்து மாயமான முனியாண்டியை தேடி வருகிறார்.

  தொப்பூர் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தண்டுகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கவிதா (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  இந்த நிலையில் கவிதா சம்பவத்தன்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டை வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. உடனே பதறிபோன அவரது கணவர் மணிகண்டன் கவிதாவை பல இடங்களில் தேடிபார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் கவிதா மாயமானது தெரியவந்தது.

  இதுகுறித்து மணிகண்டன் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஏர்வாடி அருகே இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

  களக்காடு:

  ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் மேலூரை சேர்ந்த தச்சு தொழிலாளி இருதயராஜ். இவரது மனைவி அருணா (வயது29). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

  இந்நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு அருணா திடீரென மாயமானார். அவரை கணவர் இருதயராஜ் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனைவியை தேடினார். ஆனால் அவர் கிடைக்க வில்லை. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிந்து மாயமான அருணாவை தேடி வருகிறார்.

  தருமபுரி அருகே புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே உள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் தனியார் டிராக்டர் கம்பெனி நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீனா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

  சம்பவத்தன்று கணவன்- மனைவி 2 பேரும் முத்தம் பட்டியில் உள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது தான் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நவீனா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

  இதனால் பதறிப்போன கணவர் அன்பரசன் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடியும் நவீனா கிடைக்காததால் அவர் மாயமானது தெரியவந்தது.

  இந்த சம்பவம் குறித்து அன்பரசன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
  நெய்வேலி அருகே வீட்டில் இருந்து குழந்தையுடன் சென்ற தாய் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

  நெய்வேலி:

  நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நவீனா (வயது 24). இவர்களுக்கு பிரதிக்ஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

  இந்த நிலையில் குழந்தை பிரதிக்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவளை நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் என நவீனா தனது கணவர் வீரமணியிடம் கூறினார். பின்னர் குழந்தை பிரதிக்ஷாவுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவுவரை வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சியடைந்த வீரமணி உறவினர்கள் மற்றும் பல இடங்களில் மனைவி மற்றும் குழந்தையை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதுகுறித்து வீரமணி ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து மாயமான நவீனா மற்றும் குழந்தை பிரதிக்ஷாவை தேடி வருகிறார். 

  முத்தியால்பேட்டையில் மகளுடன் தாய் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  புதுச்சேரி:

  முத்தியால்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது36). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உமையாம்பிகை (34), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு சுவேதா (9) என்ற மகள் உள்ளார். சுவேதா அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இதற்கிடையே சந்தோஷ்குமாருக்கும், அவரது மனைவி உமையாம்பிகைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோல் அவர்களுக்குகிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சந்தோஷ்குமார் பணிக்கு சென்றிருந்த நிலையில் உமையாம்பிகை பள்ளிக்கு சென்று மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

  கடலூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விசாரித்த போது அங்கும் உமையாம்பிகை வரவில்லை என்று தெரியவந்தது. மேலும் பல இடங்களில் தேடிபார்த்தும் அங்கும் இல்லை. இதையடுத்து தனது மனைவி மகளுடன் மாயமானது குறித்து சந்தோஷ்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.