என் மலர்
நீங்கள் தேடியது "மகளுடன் தாய் மாயம்"
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது36). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உமையாம்பிகை (34), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு சுவேதா (9) என்ற மகள் உள்ளார். சுவேதா அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதற்கிடையே சந்தோஷ்குமாருக்கும், அவரது மனைவி உமையாம்பிகைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோல் அவர்களுக்குகிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சந்தோஷ்குமார் பணிக்கு சென்றிருந்த நிலையில் உமையாம்பிகை பள்ளிக்கு சென்று மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
கடலூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விசாரித்த போது அங்கும் உமையாம்பிகை வரவில்லை என்று தெரியவந்தது. மேலும் பல இடங்களில் தேடிபார்த்தும் அங்கும் இல்லை. இதையடுத்து தனது மனைவி மகளுடன் மாயமானது குறித்து சந்தோஷ்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






