search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman kidnapped"

    • கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது50). இவரது மகன் முத்து. இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே ஒரு செங்கல் சூளை உரிமையாளரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் தாயும், மகனும் செங்கல் சூளையில் வேலை செய்து அந்த கடனை அடைத்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து உடல் நிலை சீரானதும் மீண்டும் வேலைக்கு வருவதாக தொலைபேசி மூலம் கூறியுள்ளனர்.

    அதை ஏற்றுக்கொள்ளாத செங்கல் சூளை உரிமையாளர் நேற்று மாலை அடியாட்களுடன் பெரியாம்பட்டிக்கு வந்து உடனடியாக வேலைக்கு வர வேண்டும் என்று மிரட்டி காரில் லட்சுமியை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் முத்து நேற்று இரவு தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அதில் செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர்.

    அப்போது புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் காரில் பெண்ணை கடத்தி சென்றவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் பெண்ணை மீட்டு அவரது மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை கடத்திய செங்கல் சூளை அதிபர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெண்ணை தாக்கி காரில் தூக்கிபோட்டு சென்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமைந்தகரையில் ரூ. 10 லட்சம் கடன் தகராறில் பெண்ணை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலை திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன். இவரது மனைவி திலகவேணி. இவர் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    நான் தற்போது வசித்து வரும் வீட்டை கடந்த 2012-ம் ஆண்டு சகாயராணி என்பவரிடம் இருந்து ரூ. 50 லட்சம் விலை பேசி ரூ. 35 லட்சம் பணம் செலுத்தி வீட்டை கிரையம் செய்து கொண்டேன்.

    மீதமுள்ள தொகை ரூ. 15 லடசத்தை 2 வருட தவணையாக தருவதாக அவரிடம் ஓப்பந்தம் போட்டுக் கொண்டேன். அதில் சிறுக, சிறுக ரூ, 5 லட்சம் பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மீதம் உள்ள ரூ. 10 லட் சத்தை கொடுக்க வேண்டி இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மதியம் என்னை தொடர்பு கொண்ட சகாயராணியின் கணவர் தாஸ் நேரில் பேச வேண்டும் என்று கூறி அழைத்ததன் பேரில் அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே நான் சென்றேன்.

    அப்போது அங்கு வந்த தாஸ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் ஈ.சிஆர். சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து உடனடியாக ரூ. 10 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மேலும் தாக்கினர்.

    அங்கிருந்து தப்பிய நான் ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். என்னை கடத்தி சென்று தாக்கிய தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவிலுக்கு சென்ற புதுப்பெண்ணை கடத்தியதாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சித்தாலங்குடி ஆனைக்குளத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அழகுகனகவள்ளி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அழகு கனகவள்ளி சாமி கும்பிட கோவிலுக்கு சென்றார். அப்போது திருப்பூரைச் சேர்ந்த மணி, அவரது நண்பர் குமார் ஆகியோர் அழகு கனகவள்ளியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, குமார் ஆகியேரை தேடி வருகிறார்கள்.

    ஒரு வயது மகனுடன் இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து ஆசிரியர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சிங்காரப்பேட்டையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(31). ஆசிரியர். இவரும், சந்தியா(23) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

    இந்நிலையில் இவர்களுக்கு ஒரு வயதில் வைசவிக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி சந்தியா, தனது மகனுடன் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன்(30) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து தனது மனைவி மற்றும் மகனை மீட்டுத் தருமாறு ஆசிரியர் மணிகண்டன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ×