search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் சினிமா ஆடைகள் பெண் வடிவமைப்பாளர் மானபங்கம் - 2 பேர் கைது
    X

    புதுவையில் சினிமா ஆடைகள் பெண் வடிவமைப்பாளர் மானபங்கம் - 2 பேர் கைது

    புதுவைக்கு உறவினருடன் சுற்றுலா வந்த பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    சென்னை கீழ்ப்பாக்கம் மாணிக்க ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது28). இவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்‌ஷனி (23). இவர் சினிமா துறையில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

    இவர்கள் இருவரும் ஒரு காரில் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தனர். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மாலையில் ரெயில்வே நிலையம் எதிரே உள்ள சூப் கடைக்கு சூப் குடிக்க வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் அக்‌ஷனி வடமாநில பெண் என நினைத்து அவர் அணிந்திருந்த ஆடை குறித்து கிண்டல் செய்தனர்.

    இதையடுத்து அக்‌ஷனி ஏன் கிண்டல் செய்தீர்கள் என்று கேட்டபோது அந்த வாலிபர்கள் மீண்டும் ஆபாச வார்த்தைகளால் அக்‌ஷனியை வர்ணித்தனர். இதனை ஹேமந்த்குமார் தட்டிக்கேட்ட போது ஆவேசம் அடைந்த அந்த வாலிபர்கள் ஹேமந்த்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் அக்‌ஷனி அணிந்திருந்த ஆடையை கிழித்து மானபங்கம் செய்தனர். இதனை அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஹனிஷ்போரிஷ் (24) என்ற பெண் தைரியமாக வந்து தட்டிக்கேட்டார். அந்த பெண்ணிடமும் வாலிபர்கள் தகராறு செய்து அவரை தாக்கினர்.

    இதையடுத்து அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். இதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி சதீஷ் (34)மற்றும் டிரைவர் கிருஷ்ணகுமார் (25) என்பதும் தப்பி ஓடியவர்கள் அமுது, தேவ் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெண்ணை மானபங்கம் செய்தல், தாக்குதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சதீஷ், கிருஷ்ணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய அமுது, தேவ் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×