search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனியில் ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரிசி மற்றும் குடிமைப் பொருட்களை எவ்வித புகா ர்களுக்கும் இடமளிக்காத வகையில் வழங்கிட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, பாலன்நகர் மற்றும் தெற்கு புதுதெரு ஆகிய பகுதிகளில் வேளாண் விளைபொருள் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ரேசன் கடைகளில் விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் ரேசன் கடைக்கு வருகைதந்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அருகில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று ரேசன் கடைகளில் இம்மாதம் வழங்கப்பட்ட அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம்,

    செயல்பாடுகள் குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்த பின்னர் அரிசி மற்றும் குடிமைப் பொருட்களை எவ்வித புகா ர்களுக்கும் இடமளிக்காத வகையில் வழங்கிட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    Next Story
    ×