search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    கொடுவிலார்பட்டியில் மண் வரப்பு கட்டுதல் பணியினை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அரண்மனைபுதூர் கொடுவிலார்பட்டி ரேசன் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே அரண்மனைப்புதூர் மற்றும் கொடுவிலார்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரண்மனைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் அய்யனார்புரம் முதல் மயானம் வரை மெட்டல் சாலை அமைக்கப்பட்டுள்ள பணி, ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மயானத்தில் காத்திருப்போர் அறை கட்டுமான பணி, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ள பணி, ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் தேனி வி.சி.புரம் சாலை முதல் முல்லைநகர் வரை இணைப்புச் சாலை அமைக்கும் பணி,

    ரூ.4.83 லட்சம் மதிப்பீட்டில் ஐஸ்வர்யா நகரில் சாலை ஓர மரக்கன்றுகள் நடுதல் பணி, ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடுதல் பணியினையும், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண்வரப்பு கட்டுதல் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, அரண்மனைபுதூர் கொடுவிலார்பட்டி ரேசன் கடைகளில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×