search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    தேனி அருகே கோவிந்தநகரத்தில் நீர்உறிஞ்சுகுழி அமைக்கும் பணியினை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சி மற்றும் கோவிந்தநகரம், ஜங்கால்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கடமலைக்குண்டு ஊராட்சிப்பகுதியில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகள் கட்டுமானப்பணி, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பறை அமைக்கும் பணி,

    ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளுக்கான சிறப்புத்திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் 5 எண்ணிக்கையிலான சோலார் மின் விளக்கு அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி, ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி,

    ரூ.5.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்கள் கழிப்பறை கட்டுமானப்பணி,

    கரட்டுப்பட்டி காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் பணி, கரட்டுப்பட்டி காலனி 2-வது தெருவில் ரூ.7.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணி,

    ரூ. 8.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணி ஆகிய பணிகளை ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தநகரம் ஊராட்சிப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிடைமட்ட நீர் உறிஞ்சு குழி அமைக்கும் பணி, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்பணை கட்டுமானப்பணி,

    ஜங்கால்பட்டி ஊராட்சிப்பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.51.73 லட்சம் மதிப்பீட்டில் ஜங்கால்பட்டி முதல் நாராயணபுரம் வரை அமைக்கப்படவுள்ள தார்சாலை பணி, ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ஜங்கால்பட்டி முதல் கருப்பதேவன்பட்டி வரை அமைக்கப்படவுள்ள தார்சாலை பணி,

    சீலையம்பட்டி ஊராட்சிப்பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப்பணி,

    தூய்மை பாரத இயக்ககத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கழிப்பறை கட்டுமானப்பணி, கோட்டூர் ஊராட்சிப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.36.26 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மெட்டல் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×