என் மலர்
சென்னை
- பாஜகவே அதிமுக-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும்.
- அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார்.
மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, தனியார் விடுதியில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தனர். அப்போது ஆதவ் அர்ஜுனா சிரித்துக் கொண்டே, பாஜகவே அதிமுக-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும். அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் பாஜகவும், திமுகவும் தங்கள் எதிரி என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதேவேளையில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை விஜய் வலியுறுத்தினார். ஆனால் அதிமுக-வை பெரிய அளவில் விமர்சிக்கவில்லை.
இதன்மூலம் விஜய் கூட்டணிக்கு தயாராக இருக்கிறார் என்பது தெளிவானது. அதிமுக- தவெக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதிமுக ஆட்சியில் பங்கு என்ற கொள்கையை ஏற்கவில்லை. மேலும், விஜய் தரப்பில் துணை முதல்வர், தவெக தலைமையில்தான் கூட்டணி போன்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
அதிமுக-வின் ஒரே இலக்கு திமுக அரசை வீழ்த்துவதுதான் என்பதால், நம்முடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என தவெக நினைத்தது.
இந்த நிலையில்தான் திடீரென அமித் ஷா, தமிழகம் வந்து, அதிமுக- பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனால் தவெக-வுக்கு தற்போது தனியாகத்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வருகிற மாதிரி தெரியவில்லை என கிண்டல் செய்யும் வகையில் ஆதவ் அர்ஜுன் கூறியுள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு அளிக்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி விரிசல் ஏற்பட வாய்புள்ளதாக தெரியவில்லை.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்.
- ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ம
துரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அவர் செல்லும் வழியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்,"#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ம.க.வை மேலும் பலப்படுத்த கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- சிறுசிறு குழப்பங்கள் எல்லாம் வருகிறது, அது அனைத்தையும் நான் சரிப்படுத்தி விடுவேன்.
சென்னை:
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று 2-வது நாளாக பா.ம.க. மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்களிடையே பேசிய அன்புமணி கூறியதாவது:-
* * நமது கட்சியில் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர் இருந்தாலும் உண்மையாக இருப்பவர்கள் வேண்டும்.
* பா.ம.க.வை தோற்றுவித்த ராமதாஸ் ஐயா நமது குலசாமி, குல தெய்வம்.
* ராமதாசின் வழிகாட்டுதல்படி கொள்கைகளை கடைபிடித்து வெற்றிப்பெற வேண்டும்.
* பா.ம.க.வை மேலும் பலப்படுத்த கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
* சிறுசிறு குழப்பங்கள் எல்லாம் வருகிறது, அது அனைத்தையும் நான் சரிப்படுத்தி விடுவேன்.
* நிர்வாகிகள் யாரையும் மாற்ற தேவையில்லை, குழப்பங்களை நான் பார்த்து கொள்கிறேன்.
* பா.ம.க. யாருடைய சொத்தும் இல்லை, தொண்டர்களின் கட்சி தான்.
* தமிழகத்தை பலர் ஆண்டிருக்கலாம், இனி நமது காலம்...
* நீங்கள் எனது உடன் பணியாளர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
* உங்களை யாராலும் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் ஒன்றும் செய்ய முடியாது.
* தமிழகத்தில் பா.ம.க.விற்கு இருக்கும் தகுதி யாருக்கும் இல்லை.
* தமிழக மக்களின் உரிமை மீட்புக்காக ஒரு நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன்.
* நான்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று இல்லை, கட்சியின் வேலைகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* வன்னியர் சங்க மாநாட்டிற்கு வந்த 3-ல் ஒரு பங்கு பேர் திடலுக்கு வர முடியவில்லை.
* வன்னியர் சங்க மாநாட்டால் அரசாங்கமே ஆடி போய் உள்ளது.
* இவர்கள் அவர்கள் என்று இல்லை, அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
* பா.ம.க. ஆட்சியமைக்க வேண்டும் என்ற காடுவெட்டி குருவின் கனவை நிறைவேற்றுவோம்.
* உங்கள் அண்ணனாக, தம்பியாக நான் உள்ளேன், தைரியமாக வேலை பாருங்கள்.
* தற்போது கட்சியில் சுதந்திரமாக செயல்பட முடிகிறது, எனது சொந்தங்கள் நீங்கள் என்னை புரிந்து கொண்டீர்கள்... அது போதும்.
* என் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது என்று கூறி கண்கலங்கினார்.
- சோழிங்கநல்லூர் வந்த அன்புமணிக்கு பா.ம.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அன்புமணியை முதலில் ஆதரித்து பேசிய பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை கண்டித்தவர் வடிவேல் ராவணன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அன்புமணி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று 2-வது நாளாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த நிலையில் சோழிங்கநல்லூர் வந்த அன்புமணிக்கு பா.ம.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பா.ம.க. பொதுச்செயலாளரான வடிவேல் ராவணன் அன்புமணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ஆதரவாளராக இருந்த வடிவேல் சரவணன் அன்புமணி பக்கம் தாவி உள்ளார்.
அன்புமணியை முதலில் ஆதரித்து பேசிய பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை கண்டித்தவர் வடிவேல் ராவணன். தற்போது திலகபாமாவுடன் மேடையில் அமர்ந்து அன்புமணிக்கு வடிவேல் ராவணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அன்புமணியின் ஆலோசனை கூட்டத்தை பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் புறக்கணித்துள்ளார்.
- தமிழக அரசின் தலைமை ஹாஜி கலாவுதீன் முகமது அயூப் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
- எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக அரசின் தலைமை ஹாஜி கலாவுதீன் முகமது அயூப் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வெளியில் வந்த அவரிடம் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை அளிப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
- மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுகிறது.
- இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மற்றும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
- மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.
சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2019-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
* கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல பெயர்களில் உலா வருகிறது.
* இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வீரியம் இல்லாதது.
* முகக்கவசம் அணிவது போன்ற வழக்கமான வழிமுறைகளையே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* இணை நோய் இருப்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.
* பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது எப்போதும் உள்ள நடைமுறை.
* தமிழ்நாட்டில் போதுமான அளவு மருந்துகள் தயார்நிலையில் உள்ளன.
* புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
* வீரியம் குறைந்த பாதிப்பே இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
* பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அறிவுறுத்தல்தான்.
* 2, 3 நாள் இருமல், காய்ச்சல், சளி என்பதுடன் பாதிப்பு சரியாகி விடும். மக்கள் அச்சப்பட வேண்டாம்.
* கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது.
* மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை தொடர்ந்து 8-வது ஆண்டாக வெளியிடப்படாதது பேசுபொருளாகி உள்ளது. கடைசியாக 2016-17-ம் நிதியாண்டிற்கான 34-வது ஆண்டு அறிக்கையை டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும். இது அதன் செயல்பாடுகள் மற்றும் நிதி செயல்திறன் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை அதன் பங்குதாரர்களுக்கு வழங்கும் ஒரு விரிவான ஆவணமாகும்.
உதாரணமாக, அரசுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் 2023-24ம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கைகளை 2023-24ம் நிதியாண்டு வரை முறையாக சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும், 2024-25-ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், ஏன் அவை வெளியிடப்படவில்லை என்பதை சரிபார்க்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற சோதனை தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
- தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பு கூட்டம் நாளை வரை நடக்க உள்ளது.
சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
- ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது.
சென்னை:
சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 இயங்குகின்றன. இந்த லாரிகள் 6 ஆயிரம், 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை கொண்டவை. மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். ஆனால் அந்த ஒப்பந்தம், கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தாமதம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதத்துக்குள் ஒப்பந்தம் போடப்படும் என சொன்னதை நம்பி, லாரி உரிமையாளர்கள் பலர் புதிய லாரிகளை வாங்கியுள்ளனர். ஆனால் நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து ஒப்பந்தத்தை இறுதி செய்து பணி ஆணைகளை வழங்கக் கோரி மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகளை சந்திக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை.
இதனால் வாரியத்துக்கு முன்பு வெகு நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இதுதொடர்பாக மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவராவ் கூறுகையில், 'ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான நாட்களே வந்துவிட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் இறுதியாகவில்லை.
உரிமையாளர்களில் சிலர் மனவேதனையில் உயிரிழந்தும் போயுள்ளனர். மேலும் பலர் லாரிக்கான மாத தவணை செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.
இதற்காக நாளை முதல் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எனவே இதில் வாரியம் உடனடியாக முடிவெடுத்து, ஒப்பந்தத்தை இறுதி செய்து ஆணைகளை வழங்க வேண்டும்' என்றனர். வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் வழக்கம் தீவிரமடைந்திருக்கிறது.
- பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 50%க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 30% பணியிடங்களை இட ஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் சமூகநீதியை சவக்குழியில் போட்டு புதைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற பல்கலைக்கழக பதிவாளர்கள் கூட்டத்தில், பல்கலைக்கழகங்களின் மொத்தப் பணியிடங்களில் 10% பணியிடங்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும், 10% பணியிடங்கள் தொழில்துறையினரையும், 10% பணியிடங்கள் வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் தவறான, பிற்போக்கான முடிவு ஆகும்.
பல்கலைக்கழக பேராசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் ஓய்வு பெற்றவர்களையும், தொழில்துறையினரையும் நியமிக்கும் போது முனைவர் பட்டம் வரை படித்து, தகுதித்தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும். பேராசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது. இந்த இரண்டுமே சமூகநீதிக்கு எதிரான செயல்கள் ஆகும். ஒருபுறம் சமூகநீதி என்று பேசிக் கொண்டு இன்னொருபுறம் சமூகநீதிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திராவிட மாடல் அரசின் முகத்திரை கிழிந்து விட்டது.
மத்திய அரசின் இணைச் செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அல்லாத, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் வல்லுனர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்த போது அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து திமுகவும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தது. ஒரு கட்டத்தின் மத்திய அரசு அதன் முடிவைக் கைவிட்டது. அப்போது மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கான காரணம் அந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பது தான்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே தவறை இப்போது அவரே செய்கிறார். மத்திய அரசே எதிர்ப்புக்கு அஞ்சி கைவிட்ட சமூகநீதிக்கு எதிரான முடிவை, இப்போது சமூகநீதி பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திணிக்கிறது என்றால் அதன் இரட்டை வேடத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் வழக்கம் தீவிரமடைந்திருக்கிறது. இப்போது பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்திலும் சமூக அநீதி தொடர அனுமதிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.






