search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorries strike"

    லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியாக சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    சாத்தூர்:

    டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 8-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதன் காரணமாக சாத்தூர், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவர முடியவில்லை. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மூலப்பொருட்கள் இல்லாததால் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டன. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழந்து உள்ளனர்.
    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.
    நாமக்கல்:

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று புதுடெல்லியில் அதன் தலைவர் மிட்டல் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தினசரி ஏற்றம் கண்டு வரும் டீசல் விலையை குறைக்க வேண்டும், வாகனங்களுக்கு 3-ம் நபர் காப்பீட்டு தொகைக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும், சுங்க கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    ஏற்கனவே லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தினசரி டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால், கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே லாரி உரிமையாளர்களின் முக்கியமான 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுமையாக பங்கேற்கும். அவ்வாறு லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×