என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை தொடர்ந்து 8 ஆண்டுகளாக வெளியிடப்படாதது ஏன்? - அமைச்சர் விளக்கம்
    X

    டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை தொடர்ந்து 8 ஆண்டுகளாக வெளியிடப்படாதது ஏன்? - அமைச்சர் விளக்கம்

    • ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
    • டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை தொடர்ந்து 8-வது ஆண்டாக வெளியிடப்படாதது பேசுபொருளாகி உள்ளது. கடைசியாக 2016-17-ம் நிதியாண்டிற்கான 34-வது ஆண்டு அறிக்கையை டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

    நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும். இது அதன் செயல்பாடுகள் மற்றும் நிதி செயல்திறன் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை அதன் பங்குதாரர்களுக்கு வழங்கும் ஒரு விரிவான ஆவணமாகும்.

    உதாரணமாக, அரசுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் 2023-24ம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கைகளை 2023-24ம் நிதியாண்டு வரை முறையாக சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும், 2024-25-ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், ஏன் அவை வெளியிடப்படவில்லை என்பதை சரிபார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும், இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    முன்னதாக, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற சோதனை தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×