என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமதாஸ் ஐயா நமது குலசாமி, குல தெய்வம் - உருக்கமாக பேசிய அன்புமணி
    X

    ராமதாஸ் ஐயா நமது குலசாமி, குல தெய்வம் - உருக்கமாக பேசிய அன்புமணி

    • பா.ம.க.வை மேலும் பலப்படுத்த கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • சிறுசிறு குழப்பங்கள் எல்லாம் வருகிறது, அது அனைத்தையும் நான் சரிப்படுத்தி விடுவேன்.

    சென்னை:

    சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று 2-வது நாளாக பா.ம.க. மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்களிடையே பேசிய அன்புமணி கூறியதாவது:-

    * * நமது கட்சியில் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர் இருந்தாலும் உண்மையாக இருப்பவர்கள் வேண்டும்.

    * பா.ம.க.வை தோற்றுவித்த ராமதாஸ் ஐயா நமது குலசாமி, குல தெய்வம்.

    * ராமதாசின் வழிகாட்டுதல்படி கொள்கைகளை கடைபிடித்து வெற்றிப்பெற வேண்டும்.

    * பா.ம.க.வை மேலும் பலப்படுத்த கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    * சிறுசிறு குழப்பங்கள் எல்லாம் வருகிறது, அது அனைத்தையும் நான் சரிப்படுத்தி விடுவேன்.

    * நிர்வாகிகள் யாரையும் மாற்ற தேவையில்லை, குழப்பங்களை நான் பார்த்து கொள்கிறேன்.

    * பா.ம.க. யாருடைய சொத்தும் இல்லை, தொண்டர்களின் கட்சி தான்.

    * தமிழகத்தை பலர் ஆண்டிருக்கலாம், இனி நமது காலம்...

    * நீங்கள் எனது உடன் பணியாளர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

    * உங்களை யாராலும் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் ஒன்றும் செய்ய முடியாது.

    * தமிழகத்தில் பா.ம.க.விற்கு இருக்கும் தகுதி யாருக்கும் இல்லை.

    * தமிழக மக்களின் உரிமை மீட்புக்காக ஒரு நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    * நான்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று இல்லை, கட்சியின் வேலைகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    * வன்னியர் சங்க மாநாட்டிற்கு வந்த 3-ல் ஒரு பங்கு பேர் திடலுக்கு வர முடியவில்லை.

    * வன்னியர் சங்க மாநாட்டால் அரசாங்கமே ஆடி போய் உள்ளது.

    * இவர்கள் அவர்கள் என்று இல்லை, அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.

    * பா.ம.க. ஆட்சியமைக்க வேண்டும் என்ற காடுவெட்டி குருவின் கனவை நிறைவேற்றுவோம்.

    * உங்கள் அண்ணனாக, தம்பியாக நான் உள்ளேன், தைரியமாக வேலை பாருங்கள்.

    * தற்போது கட்சியில் சுதந்திரமாக செயல்பட முடிகிறது, எனது சொந்தங்கள் நீங்கள் என்னை புரிந்து கொண்டீர்கள்... அது போதும்.

    * என் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது என்று கூறி கண்கலங்கினார்.

    Next Story
    ×