என் மலர்
சென்னை
- யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மனுவை தாக்கல் செய்துள்ளளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது.
த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மனுவை தாக்கல் செய்துள்ளளார். அம்மனுவில், சிவப்பு, மஞ்சள்- சிவப்பு நிறம் பதிவு செய்யப்பட்ட சபை முதன்மை அதிகாரிகள், ஊழியர்கள், ஆண்கள், முகவர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
- விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30-ந்தேதி தொடங்க உள்ளது.
* இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
* விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
* கலந்தாய்வுக்காக போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்கள் 3 ஆண்டு மருத்துவ படிப்பில் சேர தடை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- நேற்று ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 124 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160
14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-07-2025- ஒரு கிராம் ரூ.125
14-07-2025- ஒரு கிராம் ரூ.127
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
11-07-2025- ஒரு கிராம் ரூ.121
- என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
- வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.
நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை.
- தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
- சென்னை சென்டிரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில்.
- சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
சென்னை:
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 22, 29 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12712), அதற்கு மாற்றாக சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு (45 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பெருங்குடி : அறிஞர் அண்ணா 2வது-4வது தெரு, சரஸ்வதி நகர் தெற்கு மற்றும் வடக்கு, பாண்டியன் சாலை மெயின் ரோடு, செங்கனியம்மன் கோவில் தெரு, குமரகுரு அவென்யூ 1வது-11வது தெரு, டாக்டர் அம்பேத்கர் தெரு, கக்கன் தெரு, தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, ரூபி காம்ப்ளக்ஸ், சிவன்கோவல் தெரு, கிழக்கு கடற்கரை சாலை, வாசன் கண் மருத்துவமனை, வசந்தபவன் ஹோட்டல்.
சோழிங்கநல்லூர் : ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர்.
நங்கநல்லூர்: பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மெயின் ரோடு, ராஜேஸ்வரி நகர், உள்ளகரம், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு.
குன்றத்தூர்: குன்றத்தூர் மெயின் ரோடு, எம்.எஸ்.நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி தொழிற்பேட்டை, பொன்னியம்மன் கோவில் தெரு, சத்தியநாராயணபுரம், விக்னேஷ்வரா நகர் பகுதி, ஆர்.இ.நகர் 6வது மற்றும் 7வது தெரு.
சேலையூர்: அம்பேத்கர் நகர், அகரம் மெயின் ரோடு, ஜெகஜீவன் ராம் நகர், ஏர்மேன் என்கிளேவ், இந்திரா நகரின் ஒரு பகுதி, ஐஏஎஃப் சாலை, லட்சுமி அவென்யூ மற்றும் விரிவு, ராஜ்குமார் அவென்யூ, சக்தி அவென்யூ, சீனிவாச நகர், மாதா நகர், சுந்தரம் ஸ்மார்ட் சிட்டி, கேவிஎன் நகர், ரிக்கி நகர், மஹாதேவன் நகர், மாருதி நகர் அவென்யூ விரிவாக்கம், முல்லை தெரு, அவ்வை தெரு, மாதா கோவில் தெரு.
ஆலந்தூர்: எம்.கே.என்.ரோடு, ஆஷர்கானா, ஆலந்தூர் மெயின் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் லேன், ஜிஎஸ்டி ரோடு, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம், சாந்தினிகாதன் குடியிருப்புகள், மகாலட்சுமி குடியிருப்புகள், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மென்ட், திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் குடியிருப்புகள், முத்தாயாள் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபிசர் காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மண்ணாடியம்மன், பழண்டியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் இடத்தில் ஏரியை உருவாக்க முடியும்.
- 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.
மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் இடத்தில் ஏரியை உருவாக்க முடியும். இதனால் மழை பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம். ஆனால், 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமைப் பூங்கா அமைப்பதற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஏரி அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணையில், தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை பசுமைப் பூங்கா அமைக்க நடவடிக்கை கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது .
- நதிகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற உத்தரவு
- அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் உத்தரவு
பக்கிங்ஹாம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.
- தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது படி படி என்கிறது திராவிட மாடல். படிக்காதே என்கிறது காவி கும்பல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறாரே? என்ற கேள்விக்கு "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
ஓரணியில் திரள்வோம், ஓரணியில் சேருவோம் என்கிறார். இப்போது ஓரணியில் சேர என்ன அவசரம் வந்துள்ளது. படிப்பதற்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை கொடுத்திருக்கிறார். தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். அமித் ஷா சென்னை வந்து, அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.
தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது. தோல்வி பயத்தில் அடுக்கு மொழியில் பேசிகிட்டு.. இதே காவி கும்பல் உடன்தான் கலைஞர் கூட்டணி வைத்தார். இந்த காவி கும்பல் உடன்தான் அன்னைக்கு இருந்தார்கள்" என்றார்.
மேலும், "பாஜக உடன் கூட்டணி வைக்கும்போது சங்கிகளாகத்தான் இருந்தார்கள். பாஜக-விடம் அதிமுக-வை அடகு வைத்ததாக சொல்கிறார்கள். அப்படி கிடையாது. காங்கிரஸ் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக-விடம் அடகு வைத்துள்ளார்களா?. இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அதிமுக-வை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். அதைப் பற்றி அக்கறை அவர்களுக்கு எதற்கு. பாஜக, திமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது அவர்களை விழுங்கினோமா?. தோல்வி பயத்தில் ஏதாவது சொல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு நல்ல ஆட்சி வர வேண்டும். திமுக 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்கிறார்கள். நாங்கள் 234 தொகுதிகளிலும் ஜெயிப்வோம்" என்றார்.
- ஆதவ் அர்ஜுனா அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது.
- அலுவலகம் அருகே ஆயுதங்களுடன் சிலர் நோட்டமிட்டதாக புகார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவரது அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகம் அருகே சிலர் ஆயுதங்களுடன் நோட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.






