search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Counseling"

    • ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான கல்லூரிகளில் சேரலாம்.
    • நவம்பர் 7-ந்தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கும்.

    சென்னை :

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நேரடி முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இடையில் தீபாவளி பண்டிகை வந்ததால், வங்கி செயல்பாடுகளுக்கு அவகாசம் கேட்டு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதை ஏற்று நேற்று வரை மருத்துவ படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி, 14 ஆயிரத்து 21 மாணவ-மாணவிகள் இந்த பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வில், விருப்ப இடங்களை தேர்வு செய்திருக்கின்றனர். தரவரிசை பட்டியல் மற்றும் விருப்ப இடங்களை தேர்வு செய்ததன் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி முடிவை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ மாணவர் சேர்க்கை குழு ஆன்லைனில் வெளியிட இருக்கிறது. அதில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான கல்லூரிகளில் சேரலாம். இடங்கள் கிடைக்காத மாணவர்கள், அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி ஆன்லைனில் தொடங்கும் 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கு பெறலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

    நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு அழைப்பு இல்லை என மாற்றுத் திறனாளி மாணவி தனலட்சுமி புகார் செய்தார். #NeetExam

    சென்னை:

    மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

    அதில் ‘நீட்’ தேர்வில் தன்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிக மார்க் எடுத்த எனக்கு அழைப்பு இல்லை என மாற்றுத் திறனாளி மாணவி தனலட்சுமி புகார் செய்தார்.

    இவர் சென்னை மணலியை சேர்ந்தவர். தந்தை ராதாகிருஷ்ணன் மர அறுவை மில்லில் வேலை செய்கிறார். கால் ஊனமுற்ற இவர் டாக்டராக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்து கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 1114 மதிப்பெண் எடுத்தார். அப்போது நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில் அவரால் 98 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்தது. எனவே அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.

    எனவே இந்த ஆண்டு நன்றாக படித்து மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுதினார். அவர் 263 மதிப்பெண் பெற்றார். எனவே சிறப்பு பிரிவில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

    ஆனால் கலந்தாய்வில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வரவில்லை. எனவே இன்று தனது பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘மாற்று திறனாளிகள் பிரிவினருக்கு ‘நீட்’ தேர்வில் 106 முதல் 208 மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் 263 மதிப்பெண் பெற்ற எனக்கு அழைப்பு வரவில்லை. இந்த முறையாவது மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன். ஆனால் அழைப்பு அனுப்பப்படாதது ஏன் என தெரியவில்லை. எனவே அரசும், அதிகாரிகளும் தலையிட்டு கலந்தாய்வில் நான் பங்கேற்க துணை புரிய வேண்டும்’’ என கண்ணீருடன் தெரிவித்தார். #NeetExam

    மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது.
    சென்னை:

    மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பு கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி (இன்று) தொடங்கும் என்று தெரிவித்தார். அதன்படி, கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

    இதுதொடர்பான கால அட்டவணை மருத்துவ தேர்வுக்குழு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு - சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

    2-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1 முதல் 100 வரையிலும், 11 மணிக்கு 101 முதல் 356 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 357 முதல் 597 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

    3-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 598 முதல் 848 வரையிலும், 11 மணிக்கு 849 முதல் 1103 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1104 முதல் 1417 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

    4-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1418 முதல் 1667 வரையிலும், 11 மணிக்கு 1668 முதல் 1872 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1873 முதல் 2380 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

    5-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 2381 முதல் 2738 வரையிலும், 11 மணிக்கு 2739 முதல் 3164 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 3165 முதல் 4312 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

    6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 4313 முதல் 4905 வரையிலும், 11 மணிக்கு 4906 முதல் 5203 வரையிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு, பிற்பகல் 2 மணிக்கு சாதி தரவரிசை 241 முதல் 389 வரை இடம்பிடித்த தாழ்த்தப்பட்ட முஸ்லீம் பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 961 முதல் 1128 வரை இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

    7-ந்தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சாதி தரவரிசை 1129 முதல் 1389 வரையில் இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், 11 மணிக்கு சாதி தரவரிசை 263 முதல் 566 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 567 முதல் 867 வரையில் இடம்பிடித்த எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 26 முதல் 184 வரையில் இடம்பிடித்த எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கும், 4 மணிக்கு சாதி தரவரிசை 5 முதல் 96 வரையில் இடம்பிடித்த எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு சில அறிவுரைகள், நிபந்தனைகளை மருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-


    * www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்துக்கு சென்று கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பிரத்தியேகமாக அழைப்பு கடிதம் யாருக்கும் அனுப்பவில்லை.

    * கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மாணவர்கள் கலந்தாய்வு அறையில் இருக்க வேண்டும்.

    * கலந்தாய்வுக்கு வரும்போது, மாணவர்கள் அதற்கான கட்டணமான ரூ.500-ஐ ‘secretary, selection committee, chennai100’ என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து வரவேண்டும்.

    * கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் நீட் ஹால்டிக்கெட், நீட் மதிப்பெண் அட்டை, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆளறி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால் இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

    * தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால், அந்த மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, தொழிற்சார்ந்த படிப்புகள் தொடர்பான சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றும், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

    * கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவருக்கு ஒதுக்கீடு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கலந்தாய்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை நன்றாக வாசிக்க வேண்டும்.

    * அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், கலந்தாய்வு குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    * அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால், அடுத்து வரும் கலந்தாய்வில் அனுமதிக்க இயலாது.

    * கலந்தாய்வு நடைபெறும் அறைக்கு செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருடன் அவருடைய பெற்றோரில் ஒருவர் மட்டுமே கூட செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினார்கள். அதன்பிறகு முடிவு வெளியிடப்பட்டது. அவர்கள் பொது மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ தேர்வு குழுவுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.



    அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று மதிப்பெண் அடிப்படையில் சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் எந்த இடங்களையும் தேர்வு செய்யக்கூடாது. அசல் மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    நேற்று கலந்தாய்வு நடந்து கொண்டிருந்தபோது சில மாணவர்களுக்கு எந்த இடங்களும் ஒதுக்க முடியாது என்று மருத்துவ தேர்வுக்குழு அறிவித்தது. அதனால் அந்த மாணவர்கள் கலந்தாய்வு நடந்த வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரும் அசல் சான்றிதழ் இல்லாதவர்கள். இவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங் களை தேர்வு செய்திருப்பவர் கள். சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி அவர்களை கலந்தாய்வுக்கு அனுமதித்தோம்.

    ஆனால் அவர்களிடம் அசல் சான்றிதழ்கள் இல்லாததால் அவர்களுக்கு எந்த இடங்களையும் ஒதுக்க முடியவில்லை. எனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை எடுத்தவர்களும், அசல் சான்றிதழ்கள் இல்லாதோரும் கலந்தாய்வுக்கு வரக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று 569 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 69 பேர் வரவில்லை. வந்திருந்த 500 பேரில், 443 பேர் இடங்களை தேர்வு செய்தனர். 57 பேர் காத்திருப்போர் பட்டியலில் (அவர் கள் எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை) உள்ளனர். கலந்தாய்வு இன்றும் (திங்கட்கிழமை) நடக்கிறது. 
    ×