என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
    X

    கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

    • நதிகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற உத்தரவு
    • அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் உத்தரவு

    பக்கிங்ஹாம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×