என் மலர்tooltip icon

    சென்னை

    • தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டினார்.
    • வைகோவை கண்டித்து மல்லை சத்யா இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது.

    சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.

    இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மல்லை சத்யா அறிவித்து இருந்தார்.

     

    அதன்படி வைகோவை கண்டித்து மல்லை சத்யா இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்.

    தனது போராட்டத்தை தொடங்கும் முன்னர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மல்லை சத்யா மரியாதை செலுத்தினார்.

    • தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்தும், நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.73,200-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-08-2025- ஒரு கிராம் ரூ.123

    31-07-2025- ஒரு கிராம் ரூ.125

    30-07-2025- ஒரு கிராம் ரூ.127

    29-07-2025- ஒரு கிராம் ரூ.126

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    • தமிழ்நாட்டிலிருந்து ஓர் இந்தியனாக எழுதுகிறேன்...
    • தாங்கள் காலமெல்லாம் போற்றிவரும் திருக்குறள் இனம் மொழி மதம் நாடுகடந்த உலகத்தின் அசைக்கமுடியாத அறநூல்...

    சென்னை:

    கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாண்புமிகு

    இந்தியப் பிரதமர் அவர்களே!

    தங்களின்

    விடுதலைத் திருநாள் பேருரைக்கு

    மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த

    தங்கள் மாண்புக்கு

    என் ஜனநாயக வணக்கம்

    தமிழ்நாட்டிலிருந்து

    ஓர் இந்தியனாக எழுதுகிறேன்

    தாங்கள்

    காலமெல்லாம் போற்றிவரும்

    திருக்குறள்

    இனம் மொழி மதம் நாடுகடந்த

    உலகத்தின் அசைக்கமுடியாத

    அறநூல்

    மனிதம் என்ற

    ஒற்றைக் குறிக்கோளை

    உயர்த்திப் பிடிப்பது

    அதனை

    இந்தியாவின் தேசிய நூலாக

    அறிவிக்க வேண்டும் என்பது

    தமிழர்களின் நீண்ட கனவு

    மற்றும்

    நிறைவேறாத கோரிக்கை

    இந்தியாவின்

    79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்

    திருக்குறள்

    இந்தியாவின் தேசிய நூலாக

    அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை

    வெளியிட வேண்டுகிறோம்

    தாங்கள்

    கேட்டுக்கொண்ட வண்ணம்

    நமோ செயலியிலும்

    இதனைப் பதிவிடவிருக்கிறோம்

    இது

    உலகப் பண்பாட்டுக்கு

    இந்தியா கொடுக்கும் கொடை

    என்று கருதப்படும்;

    ஆவனசெய்ய வேண்டுகிறோம்

    ஆகஸ்ட் 15 அன்று

    தொலைக்காட்சி முன்னால்

    ஆவலோடு காத்திருப்போம் என்று கூறியுள்ளார். 

    • ஆயிக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜூக்கு, அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
    • சிறப்பு அழைப்பு தமக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக விவசாயி ரங்கராஜ் தெரிவித்தார்.

    சென்னை:

    ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில் பங்குபெற தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம், ஆயிக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜூக்கு, அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

    ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த இந்த அழைப்பிதழை, கடலூர் தெற்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் வடிவேலன் நேரடியாக சென்று வழங்கினார். இந்தச் சிறப்பு அழைப்பு தமக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக விவசாயி ரங்கராஜ் தெரிவித்தார்.

    • இனி ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது.
    • சரிவர என் கடமையை செய்வேன்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து சென்னை வந்த எம்.பி. கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வெளியில் இருந்து கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த இடத்தை, உள்ளே இருந்து பார்க்கிறேன். அங்கு இருக்கும் கடமை, பெருமை புரிகிறது. இனி ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு முதல்ல தமிழ்நாடு. இதுதான் என்னுடைய நோக்கம். அதுக்காகத்தான் இங்கே இருந்து போய் இருக்கேன். இது முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன். அங்கு என்ன பேசப்போகிறேன் என்பதை இங்க சொல்லக்கூடாது என்பது தான்.

    ஆணவக் கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாடியில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான அடிநாதம் கட்சிகள் மட்டும் இல்லை. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்றணும். கட்சிகள் வரும், போகும்.. நாடு நடந்துக்கொண்டே இருக்கும் என்றார். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மறறும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்காசி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    • ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும்.
    • இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது.

    சென்னை

    ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால் ஆடிப்பெருக்கு தினத்தன்று (ஆகஸ்டு 3-ந்தேதி) மிகுந்த நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும்.

    அந்த மாதத்தின் இதர நாட்கள் மூலம் கிடைக்கும் மொத்த பத்திரப்பதிவு வருமானத்தை விட, அன்றைய தினம் நடக்கும் பத்திரப்பதிவின் வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் பத்திரப்பதிவுகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுவாக முகூர்த்த மற்றும் நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறப்பதற்கு பத்திரப்பதிவுத்துறை முன்பு திட்டமிட்டது.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது. அந்த அடிப்படையில்தான் ஆடிப்பெருக்கு நாளன்றும் பதிவுகள் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம்.
    • ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவரிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார். குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம். இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை.

    எப்படி ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தியோ அப்பதுதான், ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பொதுக்குழுவில், அழைப்பு விடுப்பது குறித்து கட்சி தீர்மாணிக்கும். உரியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    • சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.
    • 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான கல்வியாளர் வசந்தி தேவி (87) சென்னையில் காலமானார்.

    சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.

    1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் வசந்தி தேவி

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார்.

    2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.

    2017இல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வென்றவர் வசந்தி தேவி.

    2016ஆம் ஆண்டில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டியிட்டார்.

    • தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
    • முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அந்த நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.

    பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.

    முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம். இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனசாி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • 11.8.2025 முதல் 23.8.2025 வரை 3ம் கட்டமாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனசாி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 11.8.2025 முதல் 23.8.2025 வரை மூன்றாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சட்டமன்றத் தொகுதி வாரியாக, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் தொடர் பிரச்சார் சூராவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி, 11.8.2025- கிருஷ்ணகிரி மேற்கு, 12.8.2025- கிருஷ்ணகிரி கிழக்கு, 13.8.2025- திருப்பத்தூர், 14.8.2025- திருப்பத்தூர், வேலூர் புறநகர், 15.8.2025- திருவண்ணாமலை மத்தியம், திருவண்ணாமலை வடக்கு, 16.8.2025- திருவண்ணாமலை தெற்கு,

    திருவண்ணாமலை கிழக்கு, 18.8.2025- திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை மத்தியம், வேலூர் புறநகர், 19.8.2025-,

    வேலூர் மாநகர், 20.8.2025-ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை கிழக்கு, 21.8.2025- காஞ்சிபுரம், 22.8.2025- செங்கல்பட்டு மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, 23.8.2025- சென்னை புறநகர், செங்கல்பட்டு கிழக்கு.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×