என் மலர்tooltip icon

    சென்னை

    • வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம்.
    • காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது. சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி என்று பல்வேறு உபாதைகளுடன் சிரமப்படுகிறார்கள்.

    அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மருந்து மாத்திரைகள் எடுத்து நான்கைந்து நாட் களில் காய்ச்சல் குணமானாலும் இருமல், உடல் சோர்வு இரண்டு, மூன்று வாரங்களுக்கு நீடிக்கிறது.

    சென்னையில் வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருக்கிறது. வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம். எனவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

    அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகவள்ளி கூறும்போது, ஒரே பள்ளியில் படிக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்த 13 மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்ததில் டெங்கு, மலேரியா அறிகுறிகள் இல்லை என்றார்.

    டாக்டர்கள் கூறும்போது, இன்புளூயன்சா காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்கள்.

    மேலும் அவர்கள் கூறும் போது, முக கவசம் அணிவது, கூட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றார்கள். காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். புரத சத்து உணவுகளையும், கீரை, காய்கறிகள் ஆகியவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்றார்கள்.

    வறட்டு இருமல், தலை வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பதாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

    • கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) அன்று நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 29.9.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண 5-ம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025, 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    வருகிற 4.10.2025 (சனிக்கிழமை) நாமக்கல், பரமத்திவேலூரிலும், 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. வட்டச் செயலாளர் செந்தில், லோடுமேன்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்.
    • லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

    பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், தி.மு.க. வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்.

    மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த தி.மு.க. வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

    ஒருபுறம், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 16.09.2025 அன்று கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார். மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே.

    உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது.
    • அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த உணவகங்களில் உள்ள பாத்திரங்கள், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பழுதாகிவிட்டன.

    இதனால் உணவு தரமாக தயாரிக்க முடியவில்லை. இதன் காரணமாக விற்பனை குறைந்தது.

    இந்த நிலையில் அனைத்து அம்மா உணவகங்களையும் சீர்ப்படுத்த மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதையடுத்து புதிதாக பொருட்கள் வாங்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

    இதனை தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள்.

    காலை, மதியம், இரவு என 3 வேளையும் சுவையான உணவு தயாரித்து வழங்கப்படுவதால் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் அதிகளவில் உணவு அருந்துகிறார்கள்.

    மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படுகிறது. இது உடனே விற்று தீர்ந்து விடுகிறது. பெரும்பாலானவர்கள் இரவில் சப்பாத்தி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. 30 உணவகங்களில் மட்டும் தான் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. அங்கு தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை வியாபாரம் நடக்கிறது. குறைந்த அளவில் விற்பனை நடந்தாலும் அதனை மூட வேண்டாம் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூடிய அளவிற்கு கூட விற்பனை இல்லை. ஆனாலும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். 3030 பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 2 ஷிப்டு அடிப்படையில் பணி செய்கின்றனர். தினக் கூலியாக அவர்களுக்கு ரூ.325 நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    மாதத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.
    • விஜயை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாலிபர் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

    சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. அவர் எப்படி விஜய் வீட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்றார்? என தெரியவில்லை. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்த போலீசாா், மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாலிபர் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து, விஜய் வீட்டில் வாலிபர் நுழைந்தது எப்படி? என காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நாளை 2-கட்ட பிரசாரத்தை நாகையில் விஜய் மேற்கொள்கிறார்.
    • புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி உள்ளார். அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரம் சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    நாளை 2-கட்ட பிரசாரத்தை நாகையில் விஜய் மேற்கொள்கிறார். இதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தினர் போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

    போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் தொண்டர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட காவல் துறை விதித்துள்ளது.

    இந்நிலையில் நாகப்பட்டினத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    புத்தூர் ரவுண்டானாவில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதியளித்த நிலையில், அண்ணா சிலை அருகே உரையாற்ற த.வெ.க.வினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    த.வெ.க.வினரின் கோரிக்கையை அடுத்து புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்ற காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

    புத்தூர் அண்ணா சிலைக்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என த.வெ.க.வினர் ஒப்புதல் அளித்தனர்.

    • நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    • தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

    சென்னை:

    நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.

    நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார். 

    • கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வேலுநாச்சியார் சிலை நிறுவப்பட்டது.
    • வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

     

    கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.50 லட்ச செலவில் நிறுவப்பட்ட வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,230-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 82,160

    16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240

    15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680

    14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-09-2025- ஒரு கிராம் ரூ.141

    17-09-2025- ஒரு கிராம் ரூ.142

    16-09-2025- ஒரு கிராம் ரூ.144

    15-09-2025- ஒரு கிராம் ரூ.143

    14-09-2025- ஒரு கிராம் ரூ.143

    • நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் அவங்க யாருன்னே தெரியாது சொல்லிட்டீங்க.
    • 2023-ம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

    நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் அவங்க யாருன்னே தெரியாது. அவங்களை காங்கிரஸ் அழைத்து வந்துள்ளது எனக்கு எதிராக அரசியல் செய்ய என்று ஒரு பச்சைப்பொய்யை சொல்லி தமிழ்நாட்டு மக்களை 14 வருஷமாக ஏமாற்றி வந்தீர்களே... அது யாரு ஏமாத்தினது.

    2023-ம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க. தி.மு.க. வந்துருச்சி. நீ எதுவும் பேசிறாத. சென்னை பக்கமே வந்துடாத. நான் மாதம் மாதம் ரூ.50,000 தந்துவிடுகிறேன் என்று டீல் பேசுனது யாரு. போட்டது யாரு... என்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    • பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் ஆவணக்காப்பக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் சார்பில் 50-வது தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று, 'பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில் முதற்கட்டமாக 1864 முதல் 1897-ம் ஆண்டு வரை (பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர்) மற்றும் 1861 முதல் 1940-ம் ஆண்டு வரையிலான இனாம் உண்மை பதிவேடு இணையத்தில் பதிவேற்றப்பட்டு பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் www.digitamiinsduarchives.gov.in ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும், 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்', 'மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' ஆகிய 2 நூல்களை வெளியிட்டார்.

    கூட்டத்தில் தேசிய ஆவணக்காப்பக தலைமை இயக்குனர் சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக்காப்பக முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஹர்சஹாய் மீனா, 20 மாநில ஆவணக்காப்பக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, விழுப்புரம், திருச்சி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    ×