search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magalir Urimai Thogai"

    • நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர்.
    • விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர். இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.

    இந்நிலையில் இந்த உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கினர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் 10 பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம், நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலகம், சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அலுவலகம் மற்றும் நெல்லை, பாளை, மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாசில்தார் அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த அறைகளுக்கு நேரில் சென்று தேவையான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வருகிற 30-ந் தேதி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தினமும் காலை முதல் மாலை வரை மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்ககள் பெறப்பட்டது.
    • ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டை வாசல் தெருவில் விண்ணப்பத்தாரர்கள் வீடுகளுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டு மற்றும் நீரேற்றும் நிலையம் மற்றும் ஏரல் அருகே உள்ள குரங்கணியில் உள்ள நீரேற்றும் நிலையம் மற்றும் வாழவல்லான் தாமிரபரணி ஆற்றில் உள்ள தடுப்பணை ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்ககள் பெறப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பரீசீ லிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இப்பணிகளை பார்வையிட்டோம்.

    சென்ற ஆண்டு பருவமழை தவறிய காரணத்தால் அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் குடிநீர் கிடைப்பதற்கு அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 350 கன அடி தண்ணிர் திறக்கப்பட்டுள்ளது.

    மருதூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மூலம் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.

    மேலும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள உறை கிணறுகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து வருகிறோம். ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு உறைகிணறுகிளில் இருந்து தண்ணீர் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தோம். ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, குரங்கணி உள்ளிட்ட 5 இடங்களில் உறைகிணறு மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டை வாசல் தெருவில் விண்ணப்பத்தாரர்கள் வீடுகளுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மாதாநகர் ரேஷன்கடை உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி. சவேரியார்புரம் பள்ளி, பெரிய செல்வன் நகரில் உள்ள ஊராட்சி சேவை மையம் மகளிர் சுய உதவிக்குழு அங்காடி, மாதாநகர் ரேஷன்கடை ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பொது மக்களின் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது சம்பந்தப்பட்ட அலுவல ர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின் போது மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளர் சரவணக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட மகளிர் தொ ண்டரணி அமை ப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, தர்ம லிங்கம், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, உமாமகேஸ்வரி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், தி.மு.க. இளைஞர் அணி ராஜேந்திரன், கிளைச் செய லாளர்கள் பொன்னுச்சாமி, சந்திரசேகர், மற்றும் கவுதம், ராயப்பன், கப்பிக்குளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×