search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு
    X

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களிடம் அவர்கள் வீட்டிற்கே சென்று கலெக்டர் செந்தில்ராஜ் கள ஆய்வு செய்த காட்சி.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்ககள் பெறப்பட்டது.
    • ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டை வாசல் தெருவில் விண்ணப்பத்தாரர்கள் வீடுகளுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டு மற்றும் நீரேற்றும் நிலையம் மற்றும் ஏரல் அருகே உள்ள குரங்கணியில் உள்ள நீரேற்றும் நிலையம் மற்றும் வாழவல்லான் தாமிரபரணி ஆற்றில் உள்ள தடுப்பணை ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்ககள் பெறப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பரீசீ லிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இப்பணிகளை பார்வையிட்டோம்.

    சென்ற ஆண்டு பருவமழை தவறிய காரணத்தால் அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் குடிநீர் கிடைப்பதற்கு அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 350 கன அடி தண்ணிர் திறக்கப்பட்டுள்ளது.

    மருதூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மூலம் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.

    மேலும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள உறை கிணறுகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து வருகிறோம். ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு உறைகிணறுகிளில் இருந்து தண்ணீர் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தோம். ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, குரங்கணி உள்ளிட்ட 5 இடங்களில் உறைகிணறு மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டை வாசல் தெருவில் விண்ணப்பத்தாரர்கள் வீடுகளுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×