search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் திருட்டை தடுத்தவர் மீது தாக்குதல்  குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை கம்யூ.கட்சியினர் முற்றுகை-45 பேர் கைது
    X

    மறியலில் ஈடுட்டவர்களை படத்தில் காணலாம்.

    மணல் திருட்டை தடுத்தவர் மீது தாக்குதல் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை கம்யூ.கட்சியினர் முற்றுகை-45 பேர் கைது

    • அரசுக்கு சொந்தமான நிலத்தில் 300-க்கும் மேற்பட்ட லோடு மணல் டிராக்டர், பொக்லைன் மூலம் அள்ளப்பட்டது.
    • இதை தடுத்த அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை சிலர் தாக்கி யதாக தெரிகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி உப்புக்குளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 300-க்கும் மேற்பட்ட லோடு மணல் டிராக்டர், பொக்லைன் மூலம் அள்ளப்பட்டது. இதை தடுத்த அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை சிலர் தாக்கி யதாக தெரிகிறது. மேலும் குப்புசாமியின் காட்டிற்கு செல்லும் பைப் லைன்களை உடைத்து உள்ளனர்.

    அதனை சரி செய்து கொண்டிருந்த போது தங்கராஜ், ஜெயபிர காஷ், சரவணன், அம்ச வேணி ஆகியோர் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் குப்புசாமிக்கு கால் முறிவு, மண்டையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். குப்புசாமி யின் பேத்தி தீப்தியை தாக்கி யதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குமார பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து குமாரபாளையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். மூத்த நிர்வாகி ராமசாமி தலைமையில் குமாரபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஒன்றிய செயலாளர் சந்திரமதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி துரைசாமி, தனேந்திரன், சேகர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×