search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளிகளுக்கு செயற்கை  நிறமேற்றி விற்கும் வியாபாரிகள்
    X

    கோப்பு படம்

    தக்காளிகளுக்கு செயற்கை நிறமேற்றி விற்கும் வியாபாரிகள்

    • விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில் காய்களாக கொண்டுவரப்படும் தக்காளிக்கு செயற்கை நிறமேற்றி விற்பனை செய்யப்படுகிறது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு சென்று ஆய்வு செய்யும்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் தரத்தையும் ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள் உள்பட பெரும்பாலான மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் தக்காளி குறைந்த விலையில் கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்து சாலையில் கொட்டிச்செல்லும் அவலம் நடந்து வருகிறது.

    தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டாலும் இதனை விளைவித்து விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளுக்கு முதலீடு கூட கிடைப்பதில்லை. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில் காய்களாக கொண்டுவரப்படும் தக்காளிக்கு செயற்கை நிறமேற்றி விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளிகளை நல்ல சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள், புதிதாக பறித்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது என நினைத்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் காய்களாக இருந்தாலும் அதற்கு செயற்கை நிறமூட்டினால் நல்ல சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. ஆனால் மறுநாளே அந்த பழத்தில் சிறுசிறு துளைகள் விழுந்து நோய்வாய்ப்பட்டதுபோல மாறி விடுகிறது.

    இதுபோன்ற பழங்களை சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு சென்று ஆய்வு செய்யும்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் தரத்தையும் ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×