search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் உரம் இருப்பு வைத்திட வேளாண் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் உரம் இருப்பு வைத்திட வேளாண் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

    • வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் போதுமான விதை மற்றும் உரம் இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, விதைச்சான்றுதுறை, விதை ஆய்வுத்துறை, கால்நடை பராமரிப்புதுறை, பட்டுவளர்ச்சித் துறை மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களின் இலக்கு சாதனை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தினை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முறையாக செயல்படுத்திட வேண்டும். இத்திட்டதினை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதால் இதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் போதுமான விதை மற்றும் உரம் இருப்பு வைத்திடவும், வடகிழக்கு பருவ மழையினால் பயிர் சேதம் ஆகாமல் பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளை அறிவுறுத்திடவும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இலக்கு சாதனை அடைந்திடும் வகையில் பணியாற்றிடவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×