search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 48 ஆயிரத்து 491 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்- அமைச்சர் தகவல்
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலத்தில் ஆய்வு கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 48 ஆயிரத்து 491 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்- அமைச்சர் தகவல்

    • 67 ஆயிரத்து 141 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
    • பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 97 பணிகளில் 81 பணிகள் நிறைவுற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வேளாண்மை இயக்குனர் பிரியதர்ஷினி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2002-23-ம் ஆண்டுகளுக்கு இடுபொருட்கள் தொகை ரூ.1 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டதன் மூலம் 67 ஆயிரத்து 141 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சிகள் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.94 கோடியே 96 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் 1,372 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 445 பணிகள் நிறைவடைந்துள்ளது.

    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக 106 குழுக்களைச் சேர்ந்த 1,696 உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் மற்றும் 18 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ.7 கோடியே 26 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட 42 பணிகளில் 24 பணிகள் நிறைவுற்றுள்ளது. பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 97 பணிகளில் 81 பணிகள் நிறைவுற்றுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் இயக்கம் திட்டத்தின் கீழ் 48 ஆயிரத்து 491 மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 7210 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 30 லட்சத்து 15 ஆயிரத்து 147 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மகப்பேறு மரணம், சிசு மரணம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 47 ஆயிரத்து 61 மனுக்களில் 44 ஆயிரத்து 755 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை அசோக்குமார், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மேயர்கள் சண்.ராமநாதன்(தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்து, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×