search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலசத்திற்கு புனிதநீர் ஊற்றிய காட்சி.
    X
    கலசத்திற்கு புனிதநீர் ஊற்றிய காட்சி.

    ஏரியூர் அருகே ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

    தருமபுரி ஏரியூரில் உள்ள மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழா நடந்தது.
    பெரும்பாலை, ‌

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே ஆங்கிலேயர் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மேட்டூர் டேம்  கட்டும் பொழுது  சோழவண்டி  (தற்போது மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியாக உள்ளது) இடம்பெயர்ந்து புதூர் சோளப்பாடியாக உருவாகும்போது அந்த பகுதியில் மாரியம்மன்  கோவில் அமைக்கப்பட்டது.

    இத்திருக்கோயிலில் ஏற்கனவே சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை அடுத்து நேற்று  மஹா கும்பாபிஷேகத்திற்காக விழா ஏற்பாடுகளை ஊர் மக்கள் ஒன்றிணைந்து செய்திருந்தனர். 

    மாரியம்மன் கோவில் முதல் நாள் நிகழ்வாக கடந்த 31-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை பம்பைமேளம், வாண வேடிக்கையுடன் ஊர்வல மாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில் வந்தடைந்தது.

     இரு தினங்களாக யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் கலாசர்சனம், கும்ப அலங்காரம், ரட்சாபந்த னம், திக்பாலகர் பூஜை, உள்ளிட்டவை நடைபெற்று நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு முதலில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பூஜை செய்யப்பட்டு தீர்த்தம் தெளிக்கபட்டது. 

    பின்னர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோ வில் கலசத்திற்க்கு தெளிக்க ப்பட்ட பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    இந்த கோவில் கும்பாபி ஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் மகாராஜன், முத்து, முருகேசன், கோல்காரர் கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.
    Next Story
    ×