search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணையில் குதூகலமாக குளித்து மகிழ்ந்த மக்கள்.
    X
    கல்லணையில் குதூகலமாக குளித்து மகிழ்ந்த மக்கள்.

    கல்லணையில் உற்சாகமாக குளித்த மக்கள்

    கல்லணையில் மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
    பூதலூர்:

    தமிழகத்தில் கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது என்று சொன்னாலும் நேற்று வெயில் கொளுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் அடித்தது. இதனால் மக்கள் நீர்நிலைகள் நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான கல்லணையில் நேற்று காலை முதல் திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான மக்கள் கூடினர். கல்லணை பாலத்திலிருந்து காவிரியில் தண்ணீர் வெளியேறும் அழகையும், கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணி மண்டபம் ஆகியவற்றை சுற்றி பார்த்தனர்.

    சிறுவர் பூங்காவில் ஏராளமான குழந்தைகள் பல்வேறு விளையாட்டு அரங்கு களிலும், ராட்டினங்களிலும் ஏறி விளையாடினர். கல்லணை காவிரியில் தண்ணீர் குறைந்த அளவில் திறக்கப்பட்டிருந்ததால், கல்லணைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். கல்லணை பொதுப்பணித் துறையினரும், தோகூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×