என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
  X
  சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

  பாலக்கோடு அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழி வைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலக்கோடு அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழி வைக்கப்பட்டுள்ளது.
  பாலக்கோடு, 

  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் கிராமத்தில்கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில்  சிறுத்தை புகுந்து கோழிகளை பிடித்து சென்றது. சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு அப்பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் ஆட்டுப்பட்டியில் இரண்டு ஆட்டு குட்டிகளையும் கடித்து குதறி கொன்று தின்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி இருந்தது. 

  அப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள்  இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். 

  தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைய பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர்,  காவேரி யப்பன் கொட்டாய் வனப்பகுதியில் புலி வரும் வழித்தடத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழியுடன் வைத்துள்ளனர். 

  இதனால் விரைவில் சிறுத்தை சிக்கும் என எதிர்பா ர்த்து காத்திருக்கின்றனர்.
  Next Story
  ×