என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைதான இருவரையும் படத்தில் காணலாம்.
  X
  கைதான இருவரையும் படத்தில் காணலாம்.

  மாரண்டஅள்ளி அருகே 80 கிலோ காப்பர் வயர் திருடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரண்டஅள்ளி அருகே 80 கிலோ காப்பர் வயரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  மாரண்ட அள்ளி,

  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள மாரண்டஅள்ளியில் இருந்து தருமபுரி சாலையில் அட்சன் என்கிற பகுதியில் தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது.

  இந்த நிறுவனத்தின் பின் புறத்தில் இரவு மர்ம நபர்கள் புகுந்து 80 கிலோ காப்பர் வயர் திருடி விட்டு சென்று விட்டனர்.
  இது குறித்து அந்த நிறுவனத்தினர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். 
  அப்போது அந்த நிறுவனத்தில் காப்பர் வயர் திருடியது வேப்பலஅள்ளி கிராமத்தை  சேர்ந்த  விஜயகுமார் (வயது23), சூடமகேந்திரன்(32) ஆகியோர் என தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரையும்  போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×