search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நூல் விலை உயா்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் ரெயில் மறியல் போராட்டம்- திருப்பூரில் 30-ந்தேதி நடக்கிறது

    அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
    திருப்பூர்:

    நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில்  எஸ்.டி.பி.ஐ.கட்சி சாா்பில்  வருகிற  30 ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் பஷீா் அகமது  நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    தமிழகத்தில் நூல் விலை ஏற்றம் காரணமாக பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி மற்றும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பஞ்சு பதுக்கலில் ஈடுபடும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும். பருத்தி ஆடைகளுக்கான டிராபேக்கை 10 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் திருப்பூரில் வருகிற  30-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

    மேலும் திருப்பூா் மட்டுமின்றி கோவை, ஈரோடு, கரூா், சேலம் ஆகிய கொங்கு மண்டலங்களில் உள்ள அனைத்து தொழில் துறையினரையும் ஒருங்கிணைத்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

    அப்போது மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தெற்கு மாவட்டத் தலைவர்ஹாரிஸ் பாபு, மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது, வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் பாபு, எஸ்.டி.டி.யு. வடக்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், மற்றும் கட்சியின் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×