என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மகன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காசிரெட்டிபேட்டை கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் பழனி, ஊத்துக்கோட்டை நாகலாபுரம் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிணமாக கிடந்தார். அவர் மகனை பார்ப்பதற்காக காசிரெட்டிபேட்டைக்கு செல்லும் வழியில் நாகலாபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story