search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனு
    X
    மனு

    விழுப்புரம் மாவட்ட குறைதீர்க்கும் நாளில் குவிந்த 345 மனுக்கள்

    முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 345 மனுக்கள் (மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள்: 22) வரப்பெற்றன.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 345 மனுக்கள் (மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள்: 22) வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நிலஎடுப்பு), ஜெயஸ்ரீ, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி.) விஸ்வநாதன், திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் திட்ட அலுவலர் (மகளிர்) காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×