search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram district"

    • விழுப்புரம் மாவட்டத்தில் 9 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி.-4 தேர்வு நடந்தது.
    • அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் இன்று (24.07.2022) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், குரூப்-4- தேர்வு நடந்து வருவதை மாவட்ட கலெக்டர் (பொ) பரமேஸ்வரி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. அதன்படி , விழுப்புரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் 207 தேர்வு மையங்களில், 68,244 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்று வருகிறது. மேற்படி தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் வினாத்தாட்களை கொண்டு செல்ல 53 நடமாடும் குழுக்களும் (ஆழடிடைந வுநயஅ), தேர்வினை கண்காணித்திட கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையிலான 27 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறுவதை தவிர்த்திட தேர்வு நடைபெறும் 257 தேர்வு கூடங்கள், மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் வீடியோ கிராபர்கள் மூலம், தேர்வு முடிந்து விடைத்தாட்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வரை அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்படவுள்ளது. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வர்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தரைதளத்தில் தனி அறைகள், தேர்வு மைங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் தடையில்லா மின்சார வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 345 மனுக்கள் (மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள்: 22) வரப்பெற்றன.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 345 மனுக்கள் (மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள்: 22) வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நிலஎடுப்பு), ஜெயஸ்ரீ, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி.) விஸ்வநாதன், திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் திட்ட அலுவலர் (மகளிர்) காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிமூட்டம் அதிகமானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
    விழுப்புரம்:

    மார்கழி மாதம் பிறந்தாலே பனிப்பொழிவும், கடும் குளிரும் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் மார்கழி மாதம் பிறந்தது.

    இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே பனியின் தாக்கமும், கடுங்குளிரும் அதிகம் உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு சாரல் மழை போல் தூறியது. இன்று காலை 5 மணிக்கு அதிகளவில் பனி கொட்டியது. இதனால் சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை காணப்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன. பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    இந்த பனிப்பொழிவு விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி, ஆசனூர், மடப்பட்டு, திருக்கோவிலூர், எலவநாசனூர்கோட்டை, சின்னசேலம் உள்பட பல இடங்களில் காணப்பட்டது.

    விழுப்புரம் பகுதிகளில் வந்த ரெயில்கள் அனைத்தும் இன்று காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரிய விட்டப்படியே வந்தன. #tamilnews
    ×