search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X
    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    புஞ்சை புளியம்பட்டியில் இன்று அதிகாலை ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    புஞ்சை புளியம்பட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகே ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது.

    இங்கு 2 பணம் எடுக்கும் எந்திரங்களும், வங்கி கணக்கு பதிவு செய்யும் ஒரு எந்திரமும் அமைந்துள்ளது. பாதுகாப்புக்காக ஏ.டி.எம். மையத்தின் வெளியே 2 கண்காணிப்பு கேமிராக்களும், உள்பகுதியில் 2 கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அலாரமும் பொருத்தப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்த கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது திடீரென அலாரம் ஒலித்ததால் அந்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். மேலும் கொள்ளை முயற்சி குறித்து வங்கி அதிகாரி மற்றும் புளியம்பட்டி போலீசாருக்கு மெசேஜ் சென்றது.

    இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபால், சத்தியமங்கல் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், வங்கி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் வெளிபகுதியில் இருந்த 2 கேமிராக்கள் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ஒரு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதன் அருகே ஒரு கடப்பாரையும் கிடந்தது. இதையடுத்து உள்ளே இருந்த கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த நபர் அடையாளம் தெரியாமல் இருக்க துணியால் முகத்தை மூடி இருந்தது பதிவாகி இருந்தது. மேலும் அந்த நபருக்கு 35 வயது இருக்கும் என்று தெரிய வ்ந்தது. வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த நபராக இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை பின்பக்கமாக திருப்பி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். எனவே இந்த நபர் ஏற்கனவே இதுபோன்ற கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

    கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்துக்கு மோப்ப நாய் ஜெர்ரி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×