என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் 3 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
  சென்னை:

  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

  அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 6 மாணவிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

  இதை தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என 100 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
  Next Story
  ×