search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாலிங்கையா கோவிலில் ‘அரக்கை’
    X
    மகாலிங்கையா கோவிலில் ‘அரக்கை’

    மஞ்சூரில் முள்ளிமலை மகாலிங்கையா கோவிலில் ‘அரக்கை’

    குந்தை சீமைக்குட்பட்ட 14 ஊர்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
    மஞ்சூர்,  

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தை சீமை பகுதியில் படுகரின மக்கள் வசித்து வருகிறார்கள். 
     
    பெரும்பாலும் தேயிலை விவசாயிகளாக உள்ளனர். இந்நிலையில் குந்தா பகுதியில் நடப்பு மாதம் தொடக்கத்தில்  இருந்தே போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. 

    நாளுக்குநாள் அதிகரித்து வரும் வறட்சியின் தாக்கத்தால் தேயிலை, மலைகாய்கறி விவசாயம் கடுமையாக பாதித்தது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். 
     
    இதை தொடர்ந்து குந்தா பகுதியில் மழை பெய்யவும், வறட்சி நீங்கி விவசாயம் செழிக்க வேண்டி படுகரின மக்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் பராம்பரிய வழக்கப்படி தங்களது கிராமங்களில் உள்ள கோவில்கள் மற்றும் நீர் நிலைகளில் ‘அரக்கை’ என்னும்( சிறப்புபூைஜ) சடங்கு மற்றும் சிறப்பு வழிபாடுகளை கடந்த சில தினங்களாக நடத்தி வருகிறார்கள்.

    இறுதியாக மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை மகாலிங்கையா சுவாமி கோவிலில் மழைக்காக ‘அரக்கை’ மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 6 ஊர் தலைவர் மாதாகவுடர் தலைமை தாங்கினார். 14 ஊர் தலைவர் டி.கே.போஜன், முள்ளிமலை ஊர் தலைவர் போஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 
     
    இந்த நிகழ்ச்சியில் குந்தை சீமைக்குட்பட்ட 14 ஊர்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். 

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நாவல் மரத்தடியில் வரிசையாக நின்று ‘நேரி’ இலைகளை கைகளில் ஏந்தியபடி பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்க தங்களது குல தெய்வமான ஹெத்தையம்மன் மற்றும் மகாலிங்கையாவை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். 

    இதைதொடர்ந்து மகாலிங்கா சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோயில் மற்றும் நீர் நிலைகளில் ‘அரக்கை’ நடத்துவதன் மூலம் பருவம் தவறாமல் மழை பெய்து வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கும் என பூஜையில் பங்கேற்ற படுகரின மக்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
    Next Story
    ×