search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி நியூஸ்"

    கவுன்சிலரின் கணவர் அவதூறு பரப்பியதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
    அரவேணு,  
    கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் நிரந்தர  பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். 
     
    நேற்று இவர்கள் திடீரென வேைலநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில் ஒரு  பெண் கவுன்சிலரின் கணவர் தூய்மை பணியாளர்கள் பற்றி முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பி அவதூறு பரப்பி வருகிறார். 
     
    மேலும் பெண் பணியாளர்கள் பணி செய்யும் போது ஆய்வு செய்கிறேன் பேர்வழி என கூறிக் கொண்டு தொல்லை கொடுக்கிறார். இவ்வாறு தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்தி வரும் அந்த நபரை கைது செய்ய வேண்டும். மேலும் அவரது மனைவியின் வார்டு உறுப்பினர் பதவியை மாவட்ட நிர்வாகம் பறிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னர். அதன்பேரில் போராட்ட த்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்கள் தெரிவித்த தகவல்களை கொண்டு கோத்தகிரி போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கோத்த கிரியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    கிரிக்கெட் ேபாட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    ஊட்டி,  
     நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்கௌவட்டி கிராமத்தில்  கிரிக்கெட் போட்டி நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊட்டி  ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன்  கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் மாயன் பேசுகையில்  இந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.  இதை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்த டுப்பு சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க படும்.  இந்த பகுதி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கபடுத்த அனைத்து உதவிகளும் செய்யப்படும்.  அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள், விவசாயத்தில் கவனம் செலுத்துங்கள்,  அத்துடன் கல்வியில் சிறப்பாக கவனம் செலுத்திபோட்டி தேர்வுகளை எழுதுங்கள் அரசு வேலைகள் கிடைக்கும் வகையில் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள் . தவறான வழிகளில் செல்வதை தடுக்க விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். அது உங்கள் உயர்வுக்கும் உடலுக்கும் நல்லது என பேசினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பாலகிருஷ்ணன், உல்லத்தி ஊராட்சி உறுப்பினர் சிவக்குமார்,   கீழ்கௌவட்டி ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்
    ×