என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொட்டபெட்டாவில் கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் ேபாட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்கௌவட்டி கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் மாயன் பேசுகையில் இந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இதை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்த டுப்பு சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க படும். இந்த பகுதி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கபடுத்த அனைத்து உதவிகளும் செய்யப்படும். அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள், விவசாயத்தில் கவனம் செலுத்துங்கள், அத்துடன் கல்வியில் சிறப்பாக கவனம் செலுத்திபோட்டி தேர்வுகளை எழுதுங்கள் அரசு வேலைகள் கிடைக்கும் வகையில் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள் . தவறான வழிகளில் செல்வதை தடுக்க விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். அது உங்கள் உயர்வுக்கும் உடலுக்கும் நல்லது என பேசினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பாலகிருஷ்ணன், உல்லத்தி ஊராட்சி உறுப்பினர் சிவக்குமார், கீழ்கௌவட்டி ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்
Next Story






