search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கணி- முதுவாக்குடி சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் வேலு, பெரியசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    X
    குரங்கணி- முதுவாக்குடி சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் வேலு, பெரியசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    சாலை அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

    குரங்கணி - முதுவாக்குடி சாலை அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தினை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது:-

    விபத்து எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து கொண்டு செல்கின்ற மாவட்ட ங்களுக்கு 3 வகையான பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.25 லட்சமும், 2-ம் பரிசா ரூ.13 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சாலை பாதுகாப்பு பணிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இம்மூன்று பரிசுகளையும் தேனி மாவட்டம் வாங்கிட வேண்டும். காவல் துறை, நெடுச்சாலைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 167 கி.மீ, மாநில சாலைகள் 230 கி.மீ, மாவட்ட முக்கிய சாலைகள் 222 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 490 கி.மீ என மொத்தம் 1109 கி.மீ நீள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டில் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 69 கி.மீ நீள சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல், தடுப்புச் சுவர் அமைத்தல், சிறு பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் 11 எண்ணிக்கையிலான சாலை சந்திப்புகள் மேம்படுத்தும் பணி, 1 குறுகலான வளைவு அகலப்படுத்தும் பணி, 8 இடங்களில் முறைப்படுத்தப்பட்ட வேகத்தடை அமைக்கும் பணி, 27 இடங்களில் வழிகாட்டு தகவல் பலகை அமைக்கும் பணி ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     
    சோத்துப்பாறை – அகமலை 16 கி.மீ நீளம் சாலை அகலப்படுத்துவது, குரங்கணி – டாப்ஸ்டேசன் (வழி) முதுவாக்குடி 13 கி.மீ நீளம் சாலை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, ரூ.33 லட்சம் மதிப்பீடு ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. போடி மெட்டு சாலையினை அகலப்படுத்துவதற்கும், தேனி நகர்ப்பகுதியில் நேரு சிலை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையின் மூலம் க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை அருகில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது.
     
    போடி நகருக்குள் அணைக்கரைப்பட்டி விலக்கு முதல் தருமத்துப்பட்டி வரை சுற்றுச்சாலை, போடி தருமத்துப்பட்டி முதல் ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வரை நீள சுற்றுச்சாலை அமைக்கும் பணி, போடிநாயக்கனூருக்கு அரைவட்ட சாலை, ஆண்டிபட்டி நகருக்கு புறவழிச்சாலை, தேனி நகருக்கு புறவழிச்சாலை ஆகிய 5 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
     
    கிராமப்புறப்பகுதிகள் மற்றும் பள்ளி, கல்லூரி சாலைப்பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் கூடுதலாக கவனம் செலுத்தி, சாலைகளை அகலப்படுத்துதல், அதிகமான வேகதடைகளை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காத நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அபராதம் விதித்திட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து  குரங்கணி – டாப்ஸ்டேசன் (வழி) முதுவாக்குடி 13 கி.மீ நீளம் சாலை அமைப்பது மற்றும் ஆண்டிபட்டி-ஜெயமங்கலம் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் மற்றும் அரசு கால்நடை கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டடம் கட்டப்பட்டு வரும் கட்டுமானப்பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் சரவணக்குமார், மகாராஜன், ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன், எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×