search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் 4 மையங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஏற்பாடு

    ஒவ்வொரு தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், 4 மையங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த, 5-ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிது.

    அங்கிருந்து, பிற மாவட்டத்திலுள்ள மையங்களுக்கு விடைத்தாள்கள் கொண்டு செல்லப்படும். ஜூன்-1ம் தேதி முதல் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி ஜூன் 23-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 4 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது:-

    பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள், திருப்பூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் திருப்பூர் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி மற்றும் உடுமலை ஸ்ரீனிவாசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும் நடக்கிறது. தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×