search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விரிவாக்கப் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
    X
    சாலை விரிவாக்கப் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சாத்தான்குளத்தில் இருந்து நெடுங்குளம் வரை சாலை விரிவாக்க பணி- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    சாத்தான்குளத்தில் இருந்து நெடுங்குளம் வரை சாலை விரிவாக்க பணியினை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் இருந்து நெடுங்குளம் வரை சாலையை விரிவாக்கம் செய்து அகலப்படுத்தி அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடக்க விழா நெடுங்குளத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சகாய எல்பின் தலைமை  தாங்கினார்.

     ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல், நெடுஞ்சாலை பாதுகாப்பு நுகர்வோர்குழு உறுப்பினர் போனிபாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை ஆய்வாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

     விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். 

    விழாவில் மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி, ஒன்றிய பொருளாளர் வேல்துரை, துணை தலைவர் மாரியப்பன், ஊராட்சி செயலாளர் தாமஸ், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்  சங்கர்,

     நகர தலைவர் வேணுகோபால், மாவட்ட பொருளாளர் எடிசன், நகர மகிளா காங்கிரஸ் தலைவி ராணி, வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்  குருசாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜோசப் அலெக்ஸ், 
    லிங்கபாண்டி, நகர துணை  தலைவர் கதிர்வேல், வட்டார இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாஸ்கர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் மென்றீஸ், நபார்டு சாலை அலுவலக உதவியாளர் மகாராஜன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     ஊராட்சி துணை தலைவர் சொள்ளமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×