என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைதான சவுந்திரபாண்டி.
  X
  கைதான சவுந்திரபாண்டி.

  மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  மதுரை

  மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்தவர் மருதுராஜன் (வயது 34) லோடுமேன். சம்பவத்தன்று இரவு இவர் செனாய்நகர், வைத்தியநாத அய்யர் தெருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள டீக்கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, துணிமணிகள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி  ஆய்வு செய்தனர்.  இதில் மருதுராஜனிடம் மோட்டார் சைக்கிளை திருடிய கும்பல், பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. எனவே போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில்  தேடுதல் வேட்டை நடத்தினர். 


  அப்போது கக்கன்தெரு வுக்கு 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தனர். அவர்களை போலீசார் விசாரித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அந்த மோட்டார் சைக்கிள், மருதுராஜனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. எனவே போலீசார் இருவரையும் பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். 

  அவர்கள் மேலபனங்காடி முத்துக்குமார் மகன் சவுந்தரபாண்டி (23) மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது மதிச்சியம், திருநகர் ஆகிய பகுதிகளில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து மருதுராஜனிடம் மோட்டார் சைக்கிளை திருடிய, சவுந்தரபாண்டியன் மற்றும் 15 வயது சிறுவனை மதிச்சியம் போலீசார் கைது செய்தனர். 
  Next Story
  ×