என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  மனநலம் பாதிக்கப்பட்டவரை பராமரிக்க முடியாததால் மகனை விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை போத்தனூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை பராமரிக்க முடியாததால் மகனை விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
  குனியமுத்தூர்:

  கோவை போத்தனூர் அருகே உள்ளது லோகநாதபுரம். இங்குள்ள முதலியார் வீதியை சேர்ந்தவர் மல்லையாசாமி(60). டெய்லர். இவரது மனைவி விஜயலட்சுமி.

  இவர்களுக்கு பவானிசங்கர்(37), சத்திய நாராயணன்(37) என்ற 2 மகன்கள் உள்ளனர். சத்திய நாராயணன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. பெற்றோர் வீட்டின் அருகேயே மற்றொரு வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

  மூத்த மகன் பவானி சங்கர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை பெற்றோர் தங்களுடன் வைத்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு விஜயலட்சுமியும் இறந்து விட்டார். இதையடுத்து பவானி சங்கரை, மல்லையாசாமி கவனித்து வந்தார்.

  சத்தியநாராயணன் தந்தைக்கும், அண்ணனுக்கும் தேவையான உதவிகளை செய்து வந்தார். மேலும் தினமும் அவர்களை சென்று சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

  நேற்று காலை சத்தியநாராயணன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் தந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

  இதையடுத்து அவர் கதவை தட்டி பார்த்தார். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேரத்தில் உள்ளே இருந்து முனகல் சத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மல்லையா சாமியும், பவானி சங்கரும் சாணி பவுடரை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தனர்.

  உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியிலேயே மல்லையா சாமி பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பவானி சங்கரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு சேர்த்த சில நிமிடங்களிலேயே அவரும் பரிதபமாக இறந்தார்.

  அடுத்தடுத்து தந்தையும், சகோதரரும் உயிரிழந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

  பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி இறந்த பிறகு மல்லையாசாமி தனது மகன் பவானி சங்கரை கவனித்து வந்தார். வயதாகி விட்டதால் அவரால் மகனை கவனிக்க முடியவில்லை. இதனால் மகனை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×