search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாய்ப்பு முகாம்.
    X
    வேலை வாய்ப்பு முகாம்.

    வேலை வாய்ப்பு முகாம்

    ராமநாதபுரத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாளஅட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (13-ந்தேதி) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×