search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல்லில் முட்டை விலை 25 பைசா உயர்வு

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஏற்கனவே ரூ.3.65 ஆக இருந்த முட்டை விலை, 25 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.3.65 ஆக இருந்த முட்டை விலை, 25 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்):

    சென்னை 405, பர்வாலா 350, பெங்களூர் 385, டெல்லி 357, ஹைதராபாத் 350, மும்பை 415, மைசூர் 400, விஜயவாடா 345, ஹொஸ்பேட் 345, கொல்கத்தா 430.

    கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 131 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×