search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மக்கள் நல பேரவையினர்.
    X
    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மக்கள் நல பேரவையினர்.

    சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு இடத்தை மீட்க வேண்டும் - கலெக்டரிடம், மக்கள் நல பேரவையினர் புகார்

    தஞ்சை அருகே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு இடத்தை மீட்க வேண்டும் என கலெக்டரிடம் மக்கள் நல பேரவையினர் புகார் அளித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது மக்கள் நலப்பேரவை சார்பில் வக்கீல் ஜீவகுமார் தலைமையில் நிர்வாகிகள் திருமேனி, செல்ல கணேசன், உமர் முக்தர், முகமது பைசல், தனசேகர் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

    தஞ்சை -திருச்சி சாலையில் திருமலை சமுத்திரம் பகுதியில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் திறந்த–வெளி சிறைச்சாலைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. 

    ஆனால் அரசுக்கு சொந்தமான இந்த  31 ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை சாஸ்திரா பல்கலைக்கழகம் கட்டியுள்ளது.

     இதனை அகற்ற உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் திறந்தவெளி சிறைச்சாலைக்கு சொந்தமான இடம் என அடையாளம் காட்டிய பலகைகளும் மர்மமான முறையில் கீழே தள்ளப் பட்டுள்ளன.

    எனவே ஏற்கனவே அபகரிக்கப்பட்ட இந்த இடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமானது என்ற அடையாளப் பலகை கல்லை மீண்டும் நிறுவ வேண்டும். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×