search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ.
    X
    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ.

    பாசனத்துக்கு தண்ணீர் விட கோரிக்கை

    பாசனத்துக்கு தண்ணீர் விட பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலூர்

    தமிழக சட்டமன்ற கூட்டத்தில் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான்  பேசியதாவது:-

    மேலூர் காவல் நிலையத்தை பிரித்து திருவாதவூரிலும், கீழவளவு காவல் நிலையத்தை பிரித்து வெள்ளலூரில் புதிய காவல் நிலையத்தை அமைக்க வேண்டும்.  பெரியார் ஆற்றில் இருந்து கொட்டாம்பட்டி, சூரம்பட்டி ஊராட்சி வரை தண்ணீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும். 

    மேலூர் ஒரு போக பாசன பகுதியை இருபோக பாசன பகுதியாக மாற்றி தண்ணீர் விட வேண்டும், நதிநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் காவிரி ஆற்றை கரூரில் இருந்து, வேடசந்தூர், நத்தம், கொட்டாம்பட்டி, மேலூர், சிவகங்கை வழியாக வைகையாற்றில் இணைக்க வேண்டும். 

    மேலூரில் நீதிபதி கள் குடியிருப்பு, வழக்கறிஞர்க ளுக்கு அலுவலகம் அறை களுடன் கூடிய ஒருங்கி ணைந்த நீதிமன்ற கட்டிட வளாகம் கட்டித்தர வேண்டும். மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கட்டிடம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம், வருவாய் ஆய்வாளர் கட்டி–டங்களை கட்டித்தர வேண்டும். 

    மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மேலூர் தொகுதியில் கிரானைட் குவாரிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அவர்களது குடும்ப நலன், ஏற்றுமதிப் பொருளாதார அபிவிருத்தி, அரசு வருவாய் போன்றபல காரணங்களை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள கிரானைட் குவாரிகள் மீண்டும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   கொட்டாம்பட்டியில் மகளிர் கலை கல்லூரி கட்டித்தர வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த–போது அழகர்கிகோவில் கிழக்கு பக்க கோட்டைச்சுவர் கட்டப்பட்டது. மீதியுள்ள கோட்டை சுவரை சீரமைக்க வேண்டும்.  பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் பணி–யாற்றும் அர்ச்சர்களுக்கும், பணியாளர்களுக்கும் வீடு கட்டித்தர ேவண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×