search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமிராவில் பதிவான கொள்ளையன் உருவம்.
    X
    காமிராவில் பதிவான கொள்ளையன் உருவம்.

    சேலம் அருகே கொள்ளை- போலீஸ் விசாரணை தீவிரம்

    சேலம் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஜெயபுரி வீதியில் வசித்து வருபவர் விஜய மாணிக்கம் (வயது36). சாய ஆலை வைத்து நடத்து வருகிறார். இவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜயமாணிக்கம் தனது மனைவி குழந்தைடன் சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டார்.

    மறுநாள் திரும்பி சென்று பார்த்தபோது வீட்டில்  கதவு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள துணி எல்லாம் சிதறிக் கிடந்தது. உள்ளே பார்த்தபோது பீரோவில்  வைத்திருந்த நகைகள்  9 பவுன்,  ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், லேப்டாப் மற்றும் கேமிரா, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை போனது தெரியவந்தது.  

    கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு  சுமார் ரூ 6 லட்சம். இதுபற்றி விஜய  மாணிக்கம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவில்  மர்ம நபர் ஒருவர் போர்வையை போத்திக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட காட்சி பதிவாகியிருந்தது. 

    அந்த நபர் டவுசர் அணிந்திருந்தார். வீட்டுக்குள் நுழையும் முன்பாக வீட்டில் வெளிப்ப–குதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை கொள்ளையன் உடைத்துள்ளான். அதன்பிறகே கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். வீட்டின் உள்லே சி.சி.டி.வி. காமிரா இருப்பதை அறிந்த அவன் வீட்டு மாடியில்  காயப்போடிருந்த போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளான்.

    கொள்ளையன் உருவம் பதிவான கண்காணிப்பு காமிர பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக மகுடஞ்சாவடி பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

     விஜய் மாணிக்கத்தின் வீட்டிலும் கடந்த சில நாட்களுக்கு கொள்ளையன் நுழைய முயன்றுள்ளான். அடுத்தடுத்த சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. அட்டகாசம் செய்யும் டவுசர் கொள்ளை–யனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×