search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்- வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்துவகை மாற்று திறனாளிகளும் தனித்துவமான தேசிய அட்டை பெறுவது அவசியம்.
    திருப்பூர்:

    மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவமான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து  கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும், தனித்துவமான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், நடைபெற உள்ளது.

    வரும் 10-ந் தேதி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்கள், 11-ந்தேதி காங்கயம் மற்றும் ஊத்துக்குளி, 12-ந் தேதி உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம், 16-ந் தேதி அவிநாசி, பல்லடம் தாலுகா அலுவலகம். 17 -ந்தேதி தாராபுரம் தாலுகா அலுவலகங்களில் காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்துவகை மாற்று திறனாளிகளும்  தனித்துவமான தேசிய அட்டை பெறுவது அவசியம். இந்த அட்டையை ஆதாரமாக கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    தனித்துவமான தேசிய அடையாள அட்டை இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஆதார், 2 புகைப்படம்  ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று   விண்ணப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×